A.3. துவக்க இயக்கி அமைப்பை மேம்படுத்து

Red Hat Enterprise Linux ஐ x86-அடிப்படையிலான கணினியில் துவக்க மென்பொருள் துவக்க இயக்கி தேவை. இந்த துவக்க இயக்கி விண்டோஸ் போன்ற மற்ற இயங்குதளத்தையும் துவக்கும். Red Hat Enterprise Linux மென்பொருள் துவக்க இயக்கியான GRUB, போன்றவை தானாக கண்டறியப்படும்.

குறிப்புகுறிப்பு
 

இங்கே குறிப்பிடப்பட்ட துவக்க இயக்கி Itanium, AMD64, அல்லது EM64T கணினிகளுக்கு பொருந்தாது.

துவக்க இயக்கி அமைப்பு திரை இல் உங்கள் தேர்வுகள்:

துவக்க இயக்கி அமைப்பை மேம்படுத்து — இந்த தேர்வை பயன்படுத்தி உங்கள் தற்போதைய துவக்க இயக்கி அமைப்பை (GRUB அல்லது LILO நீங்கள் நிறுவிய இயக்கியை பொருத்து) அப்படியே வைத்துக்கொண்டு மேம்படுத்தலை நிகழ்தும்.

துவக்க இயக்கி மேம்படுத்தலை தவிர் — உங்கள் துவக்க இயக்கியை மேம்படுத்த விருப்பமில்லை எனில் இதை தேர்வு செய்யவும். மூன்றாம் நபர் துவக்க இயக்கியை பயன்படுத்தினால், அவைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

புதிய துவக்க இயக்கி அமைப்பை உருவாக்கு — உங்கள் கணினிக்கான புதிய துவக்க இயக்கியை உருவாக்க விரும்பினால் இதை தேர்வு செய்யவும் (பகுதி 4.17 ஐ பார்த்து தகவல் தெரிந்துகொள்ளவும்).

தேர்வு செய்தபின் அடுத்து பட்டனை க்ளிக் செய்து தொடரவும்.