C.3. நிறுவலின்போது தடங்கல்

C.3.1. Red Hat Enterprise Linux நிறுவுவதற்கு எந்த கருவியும் கண்டுபிடிக்க இயலவில்லை பிழைச் செய்தி

நிறுவுவதற்கு எந்த கருவியும் கண்டுபிடிக்கமுடியவில்லை Red Hat Enterprise Linux என்று ஒரு பிழைச்செய்தி வந்தால், ஒருவேளை நிறுவல்நிரலால் கண்டறியமுடியாத ஒரு SCSI கட்டுப்படுத்தி இருக்கலாம்.

உங்கள் பிரச்சினையை தீர்க்கும் இயக்கி தகடு பிம்பம் கிடைக்கிறதா என்று பார்க்க உங்கள் வன்பொருள் விற்பனையாளரின் வலைத்தளத்தைப் பார்க்கவும். . இயக்கி தகடுகள் பற்றிய மேலும் பொதுவான விபரத்துக்கு இணைப்பு Eஐ ஆலோசிக்கவும்.

Red Hat வன்பொருள் பொருத்த பட்டியல் Hardware Compatibility List-ஐ ஆலோசிக்க முடியும். அது இந்த சுட்டியில் ஆன்லைன் கிடைக்கும்

http://hardware.redhat.com/hcl/    

C.3.2. வட்டு இயக்கி இல்லாமலே சுவடறி செய்திகள் சேமிக்கப்படுகின்றன

நிறுவலின்போது சுவடறி பிழைச் செய்தி வந்தால், பொதுவாக ஒரு தகடில் சேமிக்கமுடியும்.

தங்கள் கணினியில் தகடு இயக்கி இல்லாவிட்டால், நீங்கள் பிழைச்செய்தியை தொலைக்கணினிக்கு scp செய்யமுடியும்.

சுவடறி உரையாடல் தோன்றும்போது, சுவடறி பிழைச் செய்தி தானாகவே /tmp/anacdump.txt என்ற பெயர் கொண்ட கோப்புக்கு எழுதப்படுகிறது. உரையாடல் தோன்றியதும், [Ctrl]-[Alt]-[F2] விசைகளை அழுத்தி, புதிய tty (மாயத்திரை) க்கு மாறிக்கொண்டு, /tmp/anacdump.txtனுள் எழுதப்பட்ட செய்தியை பரிச்சயமுள்ள, செயலிலுள்ள ஒரு தொலைக்கணினிக்கு scp செய்யவும்.

C.3.3. பங்கீடு அட்டவணைகளில் பிரச்சினை

Disk Partitioning Setup (பகுதி 4.14) நிலைக்குப்பின் கீழ்க்கண்டதுபோல் ஒரு பிழைச்செய்தி வந்தால்

hda கருவியின் பங்கீட்டு அட்டவணை படிக்கமுடியவில்லை. புதிய பங்கீடுகள் உருவாக்க, அது துவக்கப்படவேண்டும் (initialized), இதனால் எல்லா தகவல்களும் அழிந்துவிடும்.

அந்த தகடியக்கியில் ஒரு பங்கீட்டு அட்டவணை இல்லாமலிருக்கலாம் அல்லது தகட்டிலுள்ள பங்கீட்டு அட்டவணை நிறுவலில் உபயோகிக்கும் பங்கீட்டு மென்பொருளால் இனங்கானமுடியாமலிருக்கலாம்.

EZ-BIOS போன்ற நிரல்களை உபயோகித்துள்ள பயனர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்துள்ளார்கள், இதனால் தகவல் மீட்கமுடியாமல் அழிவந்துபோவதுண்டு (நிறுவலுக்குமுன் தகவல் பாதுகாப்புப்படி எடுக்கவில்லை என்கிற அனுமானத்தின்படி).

எந்த வகை நிறுவலை நீங்கள் செயல்படுத்தினாலும், உங்கள் கணினியின் தற்போதைய தகவல்களை காப்புநகல் எடுத்துக்கொள்ளவேண்டும்.

C.3.4. மீதமுள்ள இடத்தை உபயோகி

ஒரு swap மற்றும் ஒரு / (வேர்) பங்கீடு உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், நீங்கள் வேர் பங்கீட்டை மீதமுள்ள இடத்தை உபயோகிக்கும்வண்ணம் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள், ஆனால் அது வன்தகட்டை முழுதும் அடைக்கவில்லை.

தங்கள் வன்தகடு 1024 உருளைகளுக்கு மேல் இருந்தால், / (வேர்) பங்கீடு உங்கள் வன்தகட்டின் மீதமுள்ள எல்லா இடத்தையும் உபயோகிக்க வேண்டுமானால், நீங்கள் ஒரு /boot பங்கீடு செய்யவேண்டும்.

C.3.5. x86 கணினி பயனர்களுக்கான மற்ற பங்கீடு பிரச்னைகள்

நீங்கள் பங்கீடு செய்வதற்கு Disk Druid உபயோகித்து, ஆனால் அடுத்த திரைக்கு செல்ல முடியாவிட்டால், ஒருவேளை நீங்கள் Disk Druid-ன் சார்புகளை திருப்திப்படுத்தத் தேவையான எல்லா பங்கீடுகளையும் உருவாக்காமல் இருக்கலாம்.

குறைந்த பட்சமாக கீழ்க்கண்ட பங்கீடுகள் இருக்கவேண்டும்:

குறிப்புகுறிப்பு
 

ஒரு பங்கீட்டின் வகையை இடமாற்றாக வரையறுக்கும்போது, ஒரு ஏற்றப்புள்ளியை ஒதுக்கத் தேவையில்லை. Disk Druid தானாகவே ஒரு ஏற்றப்புள்ளியை ஒதுக்கிவிடும்.

C.3.6. Itanium கணினி பயனர்களுக்கான மற்ற பங்கீடு பிரச்னைகள்

நீங்கள் பங்கீடு செய்வதற்கு Disk Druid உபயோகித்து, ஆனால் அடுத்த திரைக்கு செல்ல முடியாவிட்டால், ஒருவேளை நீங்கள் Disk Druid-ன் சார்புகளை திருப்திப்படுத்தத் தேவையான எல்லா பங்கீடுகளையும் உருவாக்காமல் இருக்கலாம்.

குறைந்த பட்சமாக கீழ்க்கண்ட பங்கீடுகள் இருக்கவேண்டும்:

குறிப்புகுறிப்பு
 

ஒரு பங்கீட்டின் வகையை இடமாற்றாக வரையறுக்கும்போது, ஒரு ஏற்றப்புள்ளியை ஒதுக்கத் தேவையில்லை. Disk Druid தானாகவே ஒரு ஏற்றப்புள்ளியை ஒதுக்கிவிடும்.

C.3.7. Python பிழைகளைக் காணமுடிகிறதா?

Red Hat Enterprise Linux -ன் சில மேம்படுத்தல்கள் அல்லது நிறுவல்களின்போது, நிறுவல் நிரல் (இது anaconda என்றும் அழைக்கப்படும்) Python அல்லது சுவடறிப் பிழையோடு முறியலாம். இந்த பிழை தனித்தனி பொட்டலங்களை தேர்ந்தெடுத்தபின் அல்லது மேம்படுத்தல் பதிவேட்டை /tmp/ அடைவில் சேமிக்க முயலும்போது நேரலாம். அந்தப் பிழை இதுபோல் இருக்கும்:

Traceback (innermost last):
File "/var/tmp/anaconda-7.1//usr/lib/anaconda/iw/progress_gui.py",
line 20, in run
rc = self.todo.doInstall ()
File "/var/tmp/anaconda-7.1//usr/lib/anaconda/todo.py", line 1468, in
doInstall
self.fstab.savePartitions ()
File "fstab.py", line 221, in savePartitions
sys.exit(0)
SystemExit: 0

Local variables in innermost frame:
self: <fstab.GuiFstab instance at 8446fe0>
sys: <module 'sys' (built-in)>
ToDo object:
(itodo
ToDo
p1
(dp2
S'method'
p3
(iimage
CdromInstallMethod
p4
(dp5
S'progressWindow'
p6

<failed>

/tmp/-க்கான சுட்டிகள் பிற வலைத்தளங்களுக்கு சங்கேதமாக இருந்தாலோ, தொடக்கத்திலிருந்து மாறியிருந்தாலோ அந்த சில கணினிகளில் இந்த பிழை நேரும். இந்த சங்கேத அல்லது மாறிய சுட்டிகள், நிறுவலின்போது செல்லாதவை, எனவே நிறுவல் நிரல் தகவலை எழுத இயலாது, முறிந்துவிடும்.

அப்படி ஒரு பிழை நேர்ந்தால், முதலில் anaconda -வுக்கான பிழைதிருத்தத்தை பதிவிறக்கம் செய்யவும். பிழைதிருத்தம் இங்கு கிடைக்கும்:

http://www.redhat.com/support/errata/

anaconda வலைத்தளம் ஒரு பயனுள்ள ஆலோசனையாக இருக்கும், இங்கு ஆன்லைன் இருக்கும்:

http://rhlinux.redhat.com/anaconda/

இந்த பிரச்சினை தொடர்பான பிழையறிக்கைகளைத் தேடலாம். Red Hatன் பிழைச்சுவடறி கணினியில் தேட, இங்கு செல்லவும்:

http://bugzilla.redhat.com/bugzilla/

இறுதியாக, இந்த பிழை தொடர்பான பிரச்சினைகள் இன்னும் இருந்தால், உங்கள் பொருளை பதிவு செய்து, பின் எங்கள் உதவிக்குழுவை தொடர்புகொள்ளவும். உங்கள் பொருளை பதிவு செய்ய இங்கே செல்லவும்:

http://www.redhat.com/apps/activate/