| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. துவக்கம் | அடுத்து |
தற்போதைய இயங்குதளங்களைப்போல (OS) Red Hat Enterprise Linux உம் வட்டு பகிர்வு முறையை பயன்படுத்கிறது, Red Hat Enterprise Linux ஐ நிறுவும் போது வட்டு பகிர்வில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு முன் வட்டு பகிர்வில் வேலை செய்த அனுபவம் இல்லையெனில் (அடிப்படைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில்), இணைப்பு D ஐ பார்க்கவும்.
வட்டில் Red Hat Enterprise Linux க்கான இடம் நீங்கள் நிறுவ விரும்பும் மற்ற இயங்குதளங்கள் உள்ள இடத்திலிருந்து தனிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். , விண்டோஸ், OS/2, அல்லது லினக்ஸ் பதிப்பாக இருந்தாலும் . x86, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) கணினிகளில், இரண்டு பகிர்வுகளாவது இருக்க வேண்டும் (/ மற்றும் swapRed Hat Enterprise Linux க்காக ஒதுக்கப்பட வேண்டும். Itanium கணினிகளில் Red Hat Enterprise Linux க்காக (/, /boot/efi/, மற்றும் swap) என மூன்று பகிர்வுகளாவது இருக்க வேண்டும் .
நிறுவலை துவங்கும் முன் , உங்கள்
பகிர்க்கபடாத வட்டு[1] Red Hat Enterprise Linuxநிறுவ தேவையான இடம், அல்லது
Red Hat Enterprise Linux ஐ நிறுவ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை காலியாக வைக்க வேண்டும்
உங்களுக்கு எவ்வளவு இடம் தேவை என்பதை தெரிந்துகொள்ள பகுதி 4.16.4. பாடத்தை பார்க்கவும்
உங்களிடம் போதிய இடமில்லை அல்லது Red Hat Enterprise Linux நிறுவலுக்காக காலியிடம் உருவாக்கப்பட வேண்டுமெனில் இணைப்பு D ஐ பார்க்கவும்.
| [1] | பகிர்க்கபடாத வட்டு என்பது நீங்கள் மென்பொருள் நிறுவ விரும்பும் வன்தகட்டில் தகவலுக்காக பகுதிகளாக பிரிக்கப்பட்ட இடம். வட்டில் பகிர்வுகளை உண்டாக்கியதும் அவைகள் தனி இயக்கிகள் போல செயல்படும். |