| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. துவக்கம் | அடுத்து |
![]() | குறிப்பு |
|---|---|
வன்தகடு நிறுவல் ext2, ext3, அல்லது FAT கோப்பு அமைப்புகளில் மட்டுமே வேலை செய்யும். இங்கு குறிப்பிட்ட கோப்பு அமைப்புகள் தவிர மற்ற கோப்பு அமைப்புகள் இருந்தால் உம் reiserfs, வன்தகடு நிறுவலை தொடர உங்களால் முடியாது. |
வன்தகடு நிறுவலுக்கு ISO (அல்லது CD-ROM) பிம்பம் தேவை. ISO பிம்பத்தில் CD-ROM இல் உள்ள பிம்பம் இருக்கும். ஒரு Red Hat Enterprise Linux பல பணி தொகுப்புகள் நிறுவ வேண்டி இருப்பதால் பல ISO பிம்பங்கள் தேவைப்படலாம். தேவையான ISO பிம்பத்தை அடைவிற்குள் சேகரித்த பின் (பைனரி Red Hat Enterprise Linux CD-ROMs) வன்தகட்டிலிருந்து நிறுவு என தேர்வு செய்யவும். பிறகு நிறுவல் அடைவில் பாதையை மாற்றி நிறுவலை தொடரவும்.
வன்தகடு நிறுவலுக்கு ;கீழ்கண்ட வழிகளில் உங்களை கணினியை இயக்கத்தில் வைக்க வேண்டும்.
CD-ROM களை பயன்படுத்தி நிறுவ —:CD-ROM ISO பிம்பக்கோப்பை நிறுவல் CD-ROM களில் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு CD-ROM மிலும், கீழ்கண்ட கட்டளையை இயக்கவும்
dd if=/dev/cdrom of=/tmp/கோப்பின் பெயர்.iso |
ISO பிம்பங்களை — நிறுவ வேண்டிய கணினிக்கு நகர்த்தவும் .
வன்தட்டில் நிறுவும் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க ISO சோதிப்பது நல்லது. ISO பிம்பத்தை சோதிக்க md5sumநிரலை பயன்படுத்தவும்.(md5sum நிரல் பல இயங்குதளங்களில் உள்ளது).md5sum ISO பிம்பம் இருக்கும் லினக்ஸ் கணினியில் இருக்கும்.
![]() | குறிப்பு | |
|---|---|---|
Red Hat Enterprise Linux நிறுவல் நிரலால் நிறுவும் ஊடகத்தின் நம்பகத்தன்மையை சோதிக்க முடியும். இது CD, DVD, வன் தகவு ISO, மற்றும் NFS ISO வில் வேலை செய்யும். Red Hat நிறுவலை துவங்கும் முன் ஊடகத்தை சோதிக்க வலியுறுத்தும். இதனால் நிறுவல் தொடர்பான பிழைகள் தவிர்க்கப்படலாம்.(தவறாக எழுத்தப்பட்ட சிடிக்களால் அதிக பிழைகள் நேர்வதால்) .இந்த சோதனையை பயன்படுத்த கீழ்கண்ட கட்டளையை இயக்கவும். boot: ப்ராம்ட் (eliloவுடன் Itanium கணினிக்காக உருவாக்கப்பட்டது) :
|
கூடுதலாக, கோப்பு RedHat/base/updates.img நீங்கள் நிறுவும் அடைவில் இருந்தால் , நிறுவல் நிரல் மேம்படுத்தலுக்கு உதவும். anaconda RPM பணித்தொகுப்பில் உள்ள install-methods.txt யை பார்த்து Red Hat Enterprise Linux நிறுவுவதற்கான மற்றும் மேம்படுத்துவதற்கான விவரங்களை தெரிந்து கொள்ளவும்.