| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 4. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
நீங்கள் நிறுவத்தயாராகிவிட்டீர்கள் . நீங்கள் பொதுவான நிறுவலை தொடர விரும்புகிறீர்களா அல்லது பணித்தொகுப்புகளை தேர்வு செய்து நிறுவ விரும்புகிறீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இயல்பான பணிதொகுப்பை நிறுவு திரை Red Hat Enterprise Linux நிறுவ வேண்டிய பணித்தொகுப்பு பற்றிய விவரங்களை காட்டும். இது நீங்கள் நிறுவும் Red Hat Enterprise Linux இன் பதிப்பை பொருத்து மாறுபடும்.
தற்போதைய பணித்தொகுப்பு பட்டியலை அப்படியே பயன்படுத்தி தொடர பகுதி 4.24 பகுதிக்கு செல்லவும்.
உங்களுக்கு தேவைப்பட்ட பணித்தொகுப்புகளை மட்டும் நிறுவ தேவையான பணித்தொகுப்புகளை மட்டும் தேர்வு செய்க என்பதை க்ளிக் செய்யவும். அடுத்து பட்டன் உங்களை பணித்தொகுப்புகளின் பட்டியலுக்கு அழைத்து செல்லும்.
பணித்தொகுப்புகளை அவற்றின் பயன்பாடுகள் பொருத்து குழுக்களாகவும் தேர்வு செய்யலாம். (உதாரணம், X சாளர அமைப்பு மற்றும் தொகுப்பான்கள்), தனிப்பணித்தொகுப்புகள் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பணித்தொகுப்புகளாகவும் தேர்வு செய்யலாம்.
![]() | குறிப்பு |
|---|---|
AMD64, Intel® EM64T மற்றும் Itanium கணினிகள் 32-பிட் நிறுவலை தொடரும் முன் கட்டமைப்பு இசைவு மற்றும் கட்டமைப்பு உருவாக்க ஆதரவு போன்றவற்றை தேர்வு செய்து, அவைகளுக்கான ஆதரவு உண்டா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். |
தேர்வு பெட்டியை பயன்படுத்தி பணித்தொகுப்புகளை தேர்வு செய்யவும் (பார்க்க :படம் 4-22) .
நீங்கள் நிறுவ விரும்பும் பணித்தொகுப்புகளை தேர்வு செய்யவும் அனைத்தும்(பட்டியலின் இறுதியில் உள்ள அனைத்தும்) எல்லா பணித்தொகுப்புகளையும் நிறுவும்Red Hat Enterprise Linux.
பணித்தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்ட பின் விளக்கத்தை தேர்வு செய்து அவைகள் பற்றிய முழு தகவலையும் தெரிந்துகொள்ளவும். இவைகளின் தேவையான மென்பொருள்களை சேர்க்கலாம் அல்லது தேவையற்றவைகளை நீக்கலாம்.