| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அறிமுகம் | அடுத்து |
வரைகலை பயனர் இடைமுகம்(GUI) திரை காட்சியை பயன்படுத்தி நிறுவலை தொடர விரும்புபவர்களுக்காக அமைக்கப்பட்டது. கண்பார்வை குன்றியவர்கள் Red Hat Enterprise Linux ஐ நிறுவ அவர்களுக்குகென தனி நிறுவல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். பொதுவாக லினக்ஸ் கர்னலை நிறுவ GUI அவசியமில்லை. இணைய உலாவி, நாள்காட்டி, கணிப்பான் போன்ற பல லினக்ஸ் பயன்பாடுகள் வலைகலை சூழல் இல்லாமலேயே செயல்படக்கூடியவை. இந்த சூழலை கொண்டு வன் ,மென்பொருள்களுக்கு ஏற்ப பயன்பாடுகளை அமைத்துக்கொள்ள முடியும்.
மென்பொருளுடன் போதுமான உதவியும் கிடைப்பதால் Red Hat, Inc. பலரின் விருப்பமான இயங்குதளாமாக உள்ளது, பொதுவாக மற்ற லினக்ஸ் விதங்கள் பயனர்களுக்கு போதிய உதவிகளை தருவதில்லை. Red Hat' மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் அவசியம் ஏற்பட்டால் இக்கட்டான தருணங்களின் நேரிலும் தேவையான உதவிகளை வழங்கும். பயர்களுக்கு தனிபட்ட உதவி வேண்டும் எனில் அதற்கான தொழில்நுட்ப பிரிவில் உங்கள் தேவைகளை தெரியப்படுத்த வேண்டும்.
அதிக தகவலுக்கு , பார்க்கவும் கீழ்கண்ட வலைமனையை பார்க்கவும் :
README-Accessibility கோப்பு பயனர்களின் சிறப்பு தேவைகளுக்கான கருவிகளை பயன்படுத்துவது பற்றிய தகவல்களை கொண்டது . இந்த கோப்பை /usr/share/doc/redhat-release-X/ அடைவில் காணலாம், இதில் X உங்கள் நிறுவல் நிரலின் வெளியீட்டு எண்ணை குறிக்கும்.