4.7. வலைப்பின்னல் வழியாக நிறுவுதல்

நீங்கள் வலைப்பின்னல் நிறுவலை தொடர விரும்பினால்TCP/IP அமை உரையாடல் பெட்டி தோன்றும். இந்த உரையாடல் உங்கள் வலைப்பின்னலின் முகவரி மற்றும் IP ஐ கேட்கும். IP முகவரி மற்றும் நெட்மாஸ்கை DHCP வழியாக அமைப்பதை தேர்வு செய்யலாம். கைமுறையாக உங்கள் IP முகவரியை உள்ளிட்டு [என்டர்] விசையை அழுத்தவும். நிறுவல் நிரல் உங்கள் IP முகவரியை பொருத்து நெட்மாஸ்கை தானாக ஊகிக்கும். நெட்மாஸ்க் தவறு எனில் மாற்றி அமைத்து [என்டர்] விசையை அழுத்தவும்,