பாடம் 1. Itanium கணினி பற்றிய தகவல்

1.1. Itanium நிறுவல் கண்ணோட்டம்

Red Hat Enterprise Linux Itanium கணினியில் நிறுவுவது, Red Hat Enterprise Linux ஐ மற்ற x86-சார்ந்த கணினியில் நிறுவுவதிலிருந்து வேறுபட்டது. வெற்றிகரமாக நிறுவி முடிக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

  1. Extensible Firmware Interface இல் (EFI) துவக்கவும்

  2. CD-ROM,வழியாக துவக்க முடியவில்லையெனில் LS-120 வட்டை உருவாக்கிய பின் Red Hat Enterprise Linux ஐ பயன்படுத்தி துவக்க பிம்பத்தை . உருவாக்கவும்

  3. EFI செல் மற்றும் ELILO துவக்க இயக்கியை பயன்படுத்தி , கர்னலை இயக்கி Red Hat Enterprise Linux நிறுவல் நிரலை துவக்கவும்.