| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
இந்த பாடம் CD-ROM மிலிருந்து வரைகலை இடை முகம் வழியாக, சுட்டியை பயன்படுத்தி ,Red Hat Enterprise Linux ஐ நிறுவது பற்றி விளக்கும்.
நிறுவல் நிரல் பயனர் இடைமுகத்தை பற்றி தெரிந்துகொள்ளுதல்
நிறுவல் நிரலோடு துவக்கம்
நிறுவல் முறையை தேர்வு செய்தல்
நிறுவலின் போது பயன்படுத்த வேண்டிய அமைப்பு முறைகள்(மொழி, விசைப்பலகை, சுட்டி, பகிர்வு உருவாக்கம், இன்னபிற)
நிறுவலை முடித்தல்
வரைகலை பயனர் இடைமுகத்தை (GUI) பயன்படுத்துவது பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தால்; உங்கள் சுட்டியை பயன்படுத்தி அடுத்த திரைக்கு செல்லவும், அல்லது உரை புலத்திற்கு செல்லவும்.
விசைப்பலகையை பயன்படுத்தியும் உங்கள் நிறுவலை தொடர முடியும்.
![]() | குறிப்பு | |
|---|---|---|
x86, AMD64, அல்லது Intel® EM64T கணினியில் GUI நிறுவலை பயன்படுத்த விருப்பமில்லை எனில் உரைமுறை நிறுவல் வசதியும் உள்ளது. உரை முறை நிறுவலை துவங்க boot: கட்டளையை பயன்படுத்தவும்.
உரை முறை நிறுவல் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள பகுதி 4.2 ஐ பார்க்கவும் GUI முறை நிறுவலை பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது. GUI நிரலில் Red Hat Enterprise Linux இன் முழு செயலாக்கத்தையும் முழுமையாக பயன்படுத்த முடியும். உதாரணமாக LVM அமைப்பு வசதி உரை முறை நிறுவலில் இல்லை உரை முறை நிறுவல் நிரலை பயன்படுத்துபவர்கள் நிறுவல் பற்றிய விவரங்களை பெற GUI முறையை பின்பற்றலாம். |
![]() | குறிப்பு | |
|---|---|---|
Itanium கணினியை பயன்படுத்தி GUI முறை நிறுவலை தொடர விருப்பமில்லையெனில் உரை முறை நிறுவலை பயன்படுத்தலாம். உரை முறை நிறுவலை துவக்க EFI ஷெல் ப்ராம்ட்டில் கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்.
|
Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் உரையாடல் பெட்டியுடன் கூடிய நிறுவல் நிரலை காட்டும். சிக்கலை கண்டுபிடிக்கவும் ஷெல் ப்ராம்டில் கட்டளையை உள்ளிடவும் பல வழிகள் உள்ளன, நிறுவல் நிரல் செய்திகளை ஐந்து மெய்நிகர் கன்சோலில், காட்டும் அவைகளில் தேவையானவைகளை தேர்வு செய்துகொள்ள முடியும்.
மெய்நிகர் கன்சோல் என்பது வரைகலை காட்சியற்ற , தொலை கணினியால் பயன்படுத்தமுடியாத திரை. ஒரே சமயத்தில் பல மெய்நிகர் கன்சோல்களை பயன்படுத்த முடியும்.
Red Hat Enterprise Linux ஐ நிறுவும் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க மெய்நிகர் கன்சோல்கள் பயன்படுகின்றன. இந்த கன்சோலில் நிறுவலின்போது ஏற்பட்ட பிழைகள் காட்டப்படும். அட்டவணை 4-1 இல் மெய்நிகர் கன்சோல் பற்றியும் அவைகளுக்குள் நகர்வது பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக, இயல்பான கன்சோலை விடுவதற்கு காரணம் எதுவுமில்லை(மெய்நிகர் கன்சோல் #7 வரைகலை நிறுவலுக்கு பயன்படும் ). நிறுவல் சிக்கலை தெரிந்துகொள்ள வேறு கன்சோல் திரை தேவைப்படலாம்.
| கன்சோல் | விசைகள் | உள்ளடக்கங்கள் |
|---|---|---|
| 1 | | நிறுவல் உரையாடல் |
| 2 | | ஷெல் ப்ராம்ட் |
| 3 | | நிறுவல் பதிவேடு(நிறுவல் நிரல் செய்திகள்) |
| 4 | | கணினி-தொடர்பான செய்திகள் |
| 5 | | மற்ற செய்திகள் |
| 7 | | X வரைகலை காட்சி |
அட்டவணை 4-1. கன்சோல், விசைகள் மற்றும் உள்ளடக்கங்கள்