| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
லினக்ஸ் ஆதரவுள்ள வன்பொருள்களின் பட்டியலை http://hardware.redhat.com/hcl/ வலைமனையில் காணலாம்.
இந்த தேவையான வன்பொருள் பட்டியல் உங்கள் கணினியின் தற்போதைய தேவைகளை தெரிந்துகொள்ள பயன்படும்.Red Hat Enterprise Linux நிறுவல் சுலபமாக முடிய உங்கள் கணினி பற்றிய தகவல்களை உள்ளிடவும்.
| வன்தகடு(கள்): வகை, அடையாளம், அளவு; ex: IDE hda=40 GB | |
| பகிர்வுகள்: பகிர்வுகளின் வரைபடம் மற்றும் ஏற்றப்புள்ளிகள்; ex: /dev/hda1=/home, /dev/hda2=/ (நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது தெரிந்ததும் இதை பூர்த்தி செய்யவும்) | |
| நினைவகம்: உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள RAM இன் அளவு; உம்: 128 MB, 512 MB | |
| CD-ROM: இடைமுக வகை; உம்: SCSI, IDE (ATAPI) | |
| SCSI ஏற்ப: இருந்தால் அதற்கான எண்ணை உள்ளிடவும் உம்BusLogic SCSI Adapter, Adaptec 2940UW | |
| வலைப்பின்னல் அட்டை: இருந்தால் அதற்கான எண்ணை உள்ளிடவும்; உம்: Tulip, 3COM 3C590 | |
| சுட்டி: வகை, விதிமுறை, மற்றும் பட்டன்களின் எண்ணிக்கை; உம்: ஜெனிரிக் 3 பட்டன் PS/2 சுட்டி, மௌஸ்மேன் 2 இரண்டுபட்டன் நேர் சுட்டி. | |
| திரை: அமைப்பு, எண், மற்றும் உருவாக்கியவரின் குறிப்புகள்; உம்: ஆப்டிக்வெஸ்ட் Q53, வியூசோனிக் G773 | |
| வீடியோ அட்டை: அமைப்பு, எண் மற்றும் VRAM இன் அளவு; உம்: க்ரியேட்டிவ் லாப்ஸ் க்ராபிக் ப்ளாஸ்டர் 3D, 8MB | |
| ஒலி அட்டை: அமைப்பு, சிப்செட் மற்றும் அமைப்பு எண்; உம்: S3 சோனிக்வைப்ஸ், சௌன்ட் ப்ளாஸ்டர் 32/64 AWE | |
| IP, DHCP, மற்றும் BOOTP முகவரிகள்: புள்ளியால் பிரிக்கப்பட்ட நான்கு எண்கள்; உம்: 10.0.2.15 | |
| நெட்மாஸ்க்: புள்ளியால் பிரிக்கப்பட்ட நான்கு எண்கள்; உம்: 255.255.248.0 | |
| நுழைவாயில் IP முகவரி:புள்ளியால் பிரிக்கப்பட்ட நான்கு எண்கள்; ex: 10.0.2.245 | |
| ஒன்றுக்கும் மேற்பட்ட IP முகவரிகள் (DNS):ஒன்றுக்கும் மேற்பட்ட புள்ளியால் பிரிக்கப்பட்ட எண்கள்; உம்: 10.0.2.1 | |
| வலைமனை பெயர்: உங்கள் நிறுவனத்தின் பெயர்; உம்: example.com | |
| புரவலன் பெயர்: உங்கள் கணினியின் பெயர்; உங்கள் விருப்பப்படி பெயரிடலாம்; உம்: cookie, southpark |
அட்டவணை 3-1. தேவையான வன்பொருள்கள் பட்டியல்
இதில் உள்ள வலைபின்னல் தேவைகள் மற்றும் சொற்களில் குழப்பமிருந்தால் உங்கள் வலைப்பின்னல் மேலாளரை அணுகி தெளிவு பெற்றுக்கொள்ளவும்.