இணைப்பு D. வட்டு பகிர்தல் அறிமுகம்

குறிப்புகுறிப்பு
 

இந்த இணைப்பில் x86 அல்லதா கட்டமைப்புக்கு அல்ல. எனினும் இதில் உள்ள பொது குறிப்புகள் x86 க்கு பொருந்தும்

வட்டுகளை பகிர்தல் என்பது தனியாள் கணினியின் ஒரு அங்கம். வட்டுகளை பகிர்தல் பற்றி அதிகம் பேருக்கு தெரியாததற்கு காரணம் பொதுவாக மக்கள் ஏற்கெனவே நிறுவப்பட்ட கணினி வாங்குவதே.இந்த பகுதி வட்டுகளை பகிர்தல் பற்றி தெளிவாக விளக்குவதால் இனி Red Hat Enterprise Linux ஐ சுலபமாக உங்கள் கணினியில் நிறுவ முடியும்.

வட்டுகளை பகிர்தல் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ஹால் இந்த பகுதியை விட்டு பகுதி D.1.4 க்கு சென்று Red Hat Enterprise Linux ஐ நிறுவ வட்டில் காலி இடங்களை உருவாக்குவது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ளவும். இந்த பகுதி லினக்ஸ் கணினியில் எவ்வாறு பகிர்வுகளுக்கு பெயரிடுவது மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பான தகவல்களை கொண்டது.

D.1. வன்தகடு பற்றிய அடிப்படை தகவல்கள்

— தகவல்களை சேகரிப்பது மற்றும் தேவைப்படும் போது அவற்றை தருவது போன்ற வேலைகளை செய்கிறது.

வட்டுகளை பகிர்வது பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதற்கு முன் அது தொடர்பான வன்பொருள்களை பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். வன்தகடு பற்றி தெரிந்துகொள்வது மிக சுலபம். இந்த இணைப்புவன்தகட்டின் வரை படத்தையும் பகிர்தல் எவ்வாறு நிகழ்கிறது என்பது பற்றியும் சுலபமாக விளக்கும் படம் D-1 இல் பயன்படாத புதிய வன்தகட்டை காணலாம்.

படம் D-1. பயன்படுத்தப்பட்டத் வட்டு இயக்கி

இந்த படம் வட்டுபற்றிய அடிப்படை தகவலை கொண்டது. வட்டில் சில தகவலை நாம் சேமிக்க விரும்பலாம். இந்த நிலையில் உள்ள வட்டில் தகவலை சேமிக்க முடியாது. முதலில் … செய்யவேண்டும்

D.1.1. இது நீங்கள் என்ன எழுத விரும்புகிறீர்கள் என்பதை பொருத்து அல்ல வட்டு எப்படி எழுதுகிறது என்பதை பொருத்தது.

கணினி அனுபவம் அதிகம் உள்ளவர்கள் இதை முதல் முயற்சியிலேயே முடித்துவிட முடியும். முதலில் வட்டை format செய்ய வேண்டும். வடிவமைத்தல்(பொதுவாக கோப்பு அமைப்புகளை உருவாக்குவது)தகவல்ளைை வட்டில் எழுதி வடிவமைக்கப்பட்டாத வட்டில் காலி இடங்களை உருவாக்கும்.

படம் D-2. கோப்பு அமைப்புடன் கூடிய வட்டு

படம் D-2, கோப்பு அமைப்பு வலியுருத்தும் வரிசை சில முக்கிய தகவல்களை குறிக்கும்:

  • கணினி தொடர்பான கோப்புகளை சேமிக்க வட்டு கொஞ்சம் இடத்தை பயன்படுத்திக்கொள்ளும்.

  • மீதமுள்ள இடங்களை பகுதிகளாக பிரிக்கும்.லினக்ஸ் கணினியில் இந்த பகுதிகள் blocks என்று அழைக்கப்படும். [1]

கோப்பு அமைப்பு பகிர்வுகளை அடைவுகளாகவும் கோப்புகளாவும் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் உலகத்தில் ஒரே நிலையான கோப்பு அமைப்பு தான் உள்ளது எனக்கொள்ள முடியாது படம் D-3 பட்டியலில் பல வகையான கோப்பு அமைப்புகள் இருப்பதை காணலாம். பொதுவாக இயங்கு தளங்கள் ஒரு குறிப்பிட்ட கோப்பு அமைப்பு முறையை மட்டும் பயன்படுத்துவதால் சில சமயம் பல கோப்பு அமைப்புகள் வேலை செய்யாமல் போகும். ஆனால் நீங்கள் ஒரேவகையான கோப்பு அமைப்பை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உதாரணமாக Red Hat Enterprise Linux பல கோப்பு அமைப்புகளுக்கு ஆதரவு தருவதால்(பொதுவாக பயன்படும் மற்ற இயங்கு தளங்கள் உட்பட), மற்ற கோப்பு அமைப்புடன் தகவல் பரிமாறிக்கொள்வது சுலபம்.

படம் D-3. மற்ற கோப்பு அமைப்புகளுடன் கூடிய வட்டு

கோப்பு அமைப்பில் தகவல் களை எழுதுவது என்பது துவக்கமே. இந்த பகுதியின் முக்கிய நோக்கம் தகவல்களக் சேகரிப்பது மற்றும் பெறுவது ஆகியவை. சில தகவல்கள் எழுதப்பட்ட பின் வட்டின் அமைப்பை பார்ப்போம்.

படம் D-4. தகவல் எழுதப்பட்ட வட்டின் அமைப்பு

படம் D-4இல் இதற்கு முன் காலியாக இருந்து இப்போது தகவல் நிரப்பட்டிருப்பதை காணலாம். இந்த படத்தின் மூலம் எத்தனை கோப்புகள் வட்டில் சேமிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. இந்த இடத்தில் ஒரே ஒரு கோப்பும் இருக்கலாம் அல்லது பல கோப்புகளும் இருக்கலாம். பொதுவாக வட்டில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்டாத தகவல்கள் விரவி இருக்கும்.இதற்கு துண்டுகளாக்கள் . என்று பெயர். இது ஏற்கெனவே உள்ள பகிர்வை மாற்றும் போது பயன்படும்.

கணினி தொடர்பான தொழில்நுட்பத்தின் வளர்சியால் வட்டு இயக்கிகளில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வட்டுகளின் அளவு அதிகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவற்றின் திறனும் அதிகரித்துள்ளது. இதனால் வட்டுகளை பயன்படுத்துவதில் பல மாற்றங்கள் நிகழ்துள்ளது.

D.1.2. பகிர்தல் : ஒரு இயக்கியிலிருந்து பல இயக்கியாக

வட்டுகளின் அளவு அதிகரிப்பதால் சிலர் வடிவமைக்கப்பட்ட அத்தனை இடங்களையும் ஒன்றாக வைத்துக்கொள்வதே சிறந்தது என கருதுகிறார்கள் இது தொடர்பாக தத்துவம் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கருத்துக்கள் உள்ளது. தத்துவம் சார்ந்த கருத்து, குறிப்பிட்ட அளவுக்கு மேல் வட்டில் அளவு இருந்தால் அதிக குழப்பம் விளையும் என்கிறது. தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவுக்குமேல் இடம் இருப்பதற்கு சில கோப்பு அமைப்புகள் ஆதரவு தராது அல்லது சில கோப்பு அமைப்புகள் அதிக திறன் உள்ள வட்டு இயக்கிகளை பயன்படுத்தலாம் என்கின்றனர்.

இதற்கு ஒரே தீர்வு வட்டுகளை பகிர்வுகளாக பிரிப்பதே.ஒவ்வொரு பகிர்வும் தனி வட்டாக செயல்படும். இதை பகிர்வு அட்டவணையை உருவாக்குவதன் மூலம் செய்யலாம்.

குறிப்புகுறிப்பு
 

இந்த பகுதியில் வட்டிலிருந்து பிரிக்கப்பட்ட பகிர்வு அட்டவணையை காணலாம். பொதுவாக பகிர்வு அட்டவணை பயனீட்டாளர் தகவல் மற்றும் கோப்பு அமைப்புக்கு முன் வட்டின் துவக்கத்தில் இருக்கும்.

படம் D-5. வட்டு இயக்கியுடன் கூடிய வட்டு பகிர்வு அட்டவணை

படம் D-5 பகிர்வு அட்டவணை நான்கு பகுதிகளாக அல்லது நான்கு முதன்மை பகிர்வுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். முதன்மை பரிவில் தர்க ரீதியான தகவல்கள் மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் அவற்றிற்கான தகவல் இருக்கும், அதாவது பகிர்வு அட்டவணையில் நான்கிற்கும் மேற்பட்ட பகிர்வுகள் இருக்காது.

ஒவ்வொரு பகிர்வு அட்டவணையிலும் பகிர்வுகள் பற்றிய முக்கிய தகவல்கள் இருக்கும்

  • வட்டில் உள்ள புள்ளிகளில் பகிர்வு தொடங்கும் மற்றும் முடியும் இடத்தை காணலாம்

  • பகிர்வு "செயலில்" உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்

  • பகிர்வின் வகை

இனி இவை ஒவ்வொன்றின் பயனையும் தெளிவாக தெரிந்துகொள்வோம்.முதல் மற்றும் முடிவுப்புள்ளிகள் வட்டில் உள்ள பகிர்வின் அளவு மற்றும் அது அமைந்துள்ள இடம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள உதவும் "active" குறியீடு சில இயங்கு தளங்களில் பயன்படும் துவக்க இயக்கியால் பயன்படுத்தடும்.

இந்த பகிர்வு வகையில் சில குழப்பங்கள் உள்ளது. வகை என்பது பகிர்வின் பயன்பாட்டை குறிக்கும் எண். வகை என்பது பகிர்வை பொருத்தவரை சரியான பொருளை தராது. எனினும் சில இயங்குதளங்கள் குறிப்பிட்ட சில பகிர்வை இயங்கு தளங்களை நிறுவலை துவக்க பயன்படுத்தும்

இது போன்ற சிக்கலான தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள படம் D-6, பார்க்கவும் உதாரணம்,

படம் D-6. ஒரே பகிர்வை கொண்ட வட்டு இயக்கி

பல நேரங்களில் ஒரே பகிர்வு முழு வட்டையும் பயன்படுத்தும், இது பகிர்வுகளின் மறுபதிப்பை உருவாக்கும், பகிர்வு அட்டவணை ஒரே ஒரு தகவலை மட்டுமே பயன்படுத்தும், அதாவது பகிர்வின் துவக்கம்.

இதற்கு "DOS" வகை என அடையாளம் தரப்பட்டுள்ளது.இது அட்டவணை D-1,இல் காட்டபட்டுள்ள வகைகளில் ஒன்றாகும்,

அட்டவணை D-1 இல் சில பிரபலமான பகிர்வுகளையும் அவற்றின் எண்ம மதிப்புகளையும் காணலாம்

பகிர்வின் வகைமதிப்புபகிர்வின் வகைமதிப்பு
காலி00நாவல் நெட்வேர் 38665
DOS 12-பிட் FAT01PIC/IX75
XENIX root02Old MINIX80
XENIX usr03லினக்ஸ்/MINUX81
DOS 16-bit <=32M04லினக்ஸ் swap82
Extended05Linux native83
DOS 16-bit >=3206Linux extended85
OS/2 HPFS அமீபா93
AIX08அமீபா BBT94
AIX bootable09BSD/386a5
OS/2 Boot Manager0aOpenBSDa6
Win95 FAT320bNEXTSTEPa7
Win95 FAT32 (LBA)0cBSDI fsb7
Win95 FAT16 (LBA)0eBSDI swapb8
Win95 Extended (LBA)0fSyrinxc7
Venix 8028640CP/Mdb
Novell51DOS accesse1
PPC PReP Boot41DOS R/Oe3
GNU HURD63DOS secondaryf2
Novell Netware 28664BBTff

அட்டவணை D-1. பகிர்வின் வகை

D.1.3. பகிர்விற்குள் பகிர்வு — மீட்டிய பகிர்வு பற்றி ஒரு கண்ணோட்டம்

நான்கு பகிர்வுகள் என்பது அதிக காலம் பயன்படுத்த போதுமானதாக இருக்காது. வட்டின் அளவு வளர வளர நான்கு பகிர்வுகளை உருவாக்கிய பின்னும் வட்டில் இடம் இருக்கும். இதனால் மேலும் பகிர்வுகளை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

மீட்சி பகிர்வுகளை உள்ளிடவும். அட்டவணை D-1, இல் உள்ளது போல் "Extended" வகை இருக்கும் .இந்த வகை பகிர்வு மீட்சி பகிர்வை உருவாக்க முக்கியம்.

பகிர்வை உருவாக்கி அதன் வகை மீட்சி "Extended," என அமைத்த பின் பகிர்வு அட்டவணை உருவாகும். மொத்ததில் மீட்சி பகிர்வு சாதாரண வட்டை போல — செயல்படும். இதில் உள்ள பகிர்வு அட்டவணை ஒன்றுக்கும் மேற்பட்ட பகிர்வுகளை குறிக்கும்.( தர்கநீதியான பகிர்வுகள், நான்குமுதன்மை பகிர்வுகளுக்கு) மாறாக செயல்படும்.படம் D-7இல் வட்டு இயக்கியில் ஒரு முதன்மை பகிர்வும் ஒரு மீட்சி பகிர்வும் இரண்டு தர்க ரீதியான பகிர்வுகளும் (சில காலி இடங்களும்)இருப்பதை காணலாம்.

படம் D-7. மீட்சி பகிர்வோடு கூடிய வட்டு இயக்கி

படத்தில் உள்ளது போல் முதன்மை மற்றும் தற்கரீதியான பகிர்வுகளுக்கு இடையே வேறுபாடு — உண்டு. பொதுவாக நான்கு முதன்மை பகிர்வுகள் மற்றும் பல தர்கரீதியான பகிர்வுகளுக்கும் அனுமதி உண்டு. ஆனால் லினக்ஸ் பகிர்வுகளை அணுகும் முறையை பொருத்து 12 க்கும் அதிகமான பகிர்வுகளை பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

இப்போது நாம் பகிர்வுகளை பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம் இனி INCLUDE Hat Enterprise Linuxஐ எப்படி நிறுவுவது எனப்பார்ப்போம்.

D.1.4. Red Hat Enterprise Linux க்கான இடத்தை உருவாக்குதல்

உங்கள் கணினியில் பகிர்வுகளை மீண்டும் உருவாக்கும் போது கீழ்கண்ட பட்டியலில் உள்ள சூழல்கள் தோன்றும்.

  • பகிர்க்கப்படாத காலி இடம் உள்ளது

  • பயன்படுத்தப்படாத பகிர்வு உள்ளது

  • பயன்பாட்டில் உள்ள பகிர்வில் காலி இடம் உள்ளது

இந்த ஒவ்வொரு சூழலையும் இனி விளக்கமாக பார்ப்போம்

குறிப்புகுறிப்பு
 

கீழ்கண்ட வரைபடம் பகிர்வு பற்றி எளிய முறையில் விளக்கும். ஆனால் Red Hat Enterprise Linux ஐ நிறுவும் போது நீங்கள் பகிர்வின் உண்மையான வரைபடத்தை உணரமுடியும்

D.1.4.1. பகிர்க்க படாத காலி இடத்தை பயன்படுத்துகிறது

இந்த சூழலில் நீங்கள் குறிப்பிட்ட பகிர்வுகள் முழு வன்தகட்டையும் பயன்படுத்தாமல், பயனில் இல்லாத இடங்களை அப்படியே விட்டு வைக்கும் படம் D-8 இல் உள்ளது போல் இருக்கும்

படம் D-8. பகிர்க்கப்படாத ாலி இடங்களளுடன் கூடிய வட்டு இயக்கி

படம் D-8, இல்1 பகிர்பட்டதாத, ஒதுக்படாத காலி இடத்தையும் 2 பகிர்க்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட காலி இடத்தையும் குறிக்கும்.

பயன்படுத்தபடாத வன்தகட்டை எந்த வகையில் சேர்பது என்று உங்களுக்கு தோன்றலாம். அனைத்து காலி இடங்களும் மேற்கூறிய எந்த வகையிலும் சேராது.

ஒரு வேளை தேவையான பகிர்வுகளை பயனில் இல்லாத இடத்தில் உருக்குவது மிக சுலபம்.(Red Hat Enterprise Linux க்காக முதிய வன்தகட்டை நீங்கள் வாங்காத நிலையில்). ஏற்கெனவே நிறுவப்பட்ட நிலையில் கிடைக்கும் கணினியில் எல்லா காலி இடங்களையும் பயன்படுத்துமாறு அமைக்கப்பட்டிருக்கும்(பகுதி D.1.4.3 ஐ பார்க்கவும்).

அடுத்து சூழ்நிலைகள் பற்றி தெரிந்துகொள்வோம்

D.1.4.2. பயன்படுத்தப்படாத பகிர்வில் உள்ள இடத்தை பயன்படுத்துவது

படம் D-9, இல் உள்ளது போல் சில பகிர்வுகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை காணலாம்.

படம் D-9. பயன்படுத்த முடியாந்த நிலையில் உள்ள வட்டு

படம் D-9இல் 1 பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வட்டு 2 பயன்படுத்த முடியாத வட்டை லினக்ஸ் பயன்படுத்துவதற்காக ஒதுக்குவது ஆகியவற்றை குறிக்கும்.

இது போன்ற சூழ்நிலையில் பயனில் இல்லாத பகிர்வுகளை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு பகிர்வுகளை அழித்து விட்டு அதே இடத்தில் லினக்ஸ் பகிர்வை உருவாக்க வேண்டும்.

D.1.4.3. செயலில் உள்ள பகிர்வில் உள்ள காலி இடங்களை பயன்படுத்துவது

இது அதிகம் பேர் செய்ய விரும்பும் சற்று கடினமான செயல். உங்கள் பகிர்வில் அதிக காலி இடங்கள் இருந்தாலும் அவைகள் தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும். ஏற்கெனவே மென்பொருள் நிறுவப்பட்ட கணினியில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

உங்கள் கணினியுடன் புதிய வன்தட்டை சேர்க்க இரண்டு முறைகள் உண்டு:

சிதைத்து மீண்டும் பகிர்வுகளை உருவாக்குகிறது

பெரிய பகிர்விலிருந்து பல சிறிய பரிவுகளை உருவாக்கும் போது தகவல் இழப்பு நேரிடலாம். எனவே பகிர்வில் உள்ள தகவல்களை முழுவதுமாக காப்பு எடுத்து, காப்பு எடுத்த கோப்புகள் சரியாக உள்ளதா என பரிசோதித்து பார்த்து பிறகு பகிர்வை அழிக்கவும்.

எச்சரிக்கைஎச்சரிக்கை
 

உங்கள் பகிர்வில் இயங்குதளம் ஏதாவது நிறுவப்பட்டிருந்தால் அதை மீண்டும் நிறுவ வேண்டி இருக்கும்.ஏற்கெனவே மென்பொருள் நிறுவப்பட்டு விற்கப்படும் கணினிகள் மென்பொருளுக்கான CD க்களுடன் விற்பனைக்கு வருவதில்லை. பகிர்வுகளை அழிக்கும் முன் சோதித்து இதை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

சிறிய பகிர்வுகளை உருவாக்கிய பின் நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயங்குதளத்தை நிறுவி காப்பெடுத்த கோப்புகளை மீட்டுக்கொள்ளலாம். பிறகு நீங்கள் நிறுவவிரும்பும் மென்பொருளையும் Red Hat Enterprise Linux நிறுவலாம்.

படம் D-10. வட்டு இயக்கி சிதைக்கப்பட்டு பகிர்க்கப்படுகிறது

படம் D-10 இல் 1 பகிர்வுகளை உருவாக்கும் முன் 2 உருவாக்கிய பின்

எச்சரிக்கைஎச்சரிக்கை
 

படம் D-10 இல் சரியாக காப்பு எடுக்காததால் தகவல் இழப்பு நேர்ந்திருப்பதை காணலாம்

சிதைக்காமல் பகிர்வுகளை உருவாக்குவது

இங்கே நீங்கள் சில மென்பொருள்களை இயக்கி செயற்கறிய செயல்கள் செய்யலாம். தகவல் இழப்பு எதுவும் இல்லாமல் வட்டுகளை பிரிப்பதற்கென சில மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன . அவைகள் பற்றி தெளிவாக தெரிந்துகொண்டு பிறகு உங்கள் தேவைக்கேற்ப அவைகளை பயன்படுத்தலாம்

சிதைக்காமல் நேரடியாக பகிர்வுகளை உருவாக்க சில வழிமுறைகள் உள்ளன

  • தகவல்களை சுருக்கி காப்பு எடுத்துக்கொள்வது

  • பகிர்வின் அளவை மாற்றி அமைப்பது

  • புதிய பகிர்வை உருவாக்குதல்

இனி இந்த வழிமுறைகள் பற்றி விளக்கமாக பார்ப்போம்.

D.1.4.3.1. ஏற்கெனவே உள்ள தகவல்களை சுருக்குவது.

படம் D-11 இல் உங்கள் தகவல் சுருக்கப்பட்டதை காணலாம். தகவல்களை சுருக்கி மீண்டும் அடுக்குவதற்கு காரணம் பகிர்வின் "end" முடிவில் அதிக காலிடங்களை உருவாக்கவே.

படம் D-11. வட்டு சுருக்கப்பட்டு கொண்டிருக்கிறது

படம் D-11 1 சுருக்கப்படும் முன் 2 பின்

இது மிக முக்கியமான பகுதி இது இல்லாமல் தகவல்களை நகர்த முடியாது. சில தவிர்க இயலாத காரணங்களால்(இது அளவை கட்டுப்படுத்துவதால்) உங்களால் பகிர்வின் அளவை மாற்ற முடியாமல் போகலாம். இது போன்ற நேரங்களில் சிதைத்து பகிர்வை உருவாக்குவது நல்லது.

D.1.4.3.2. பகிர்வின் அளவை மாற்றி அமைப்பது

படம் D-12 அளவு மாற்றுவதை காணலாம். நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளை பொருத்து அளவுகள் மாறும் . பல சமயங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட காலி இடங்கள் புதிய பகிர்வுகளை உருவாக்க பயன்படும்.

படம் D-12. அளவு மாற்றி பகிர்க்கப்பட்ட வட்டு இயக்கி

படம் D-12 இல் 1 மாற்றத்துக்கு முன் 2பின்

பகிர்வின் அளவை மாற்ற பயன்படும் மென்பொருள் புதிதாக உருவாக்கப்பட்ட காலி இடத்தை எதற்கு பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்வது நல்லது. படத்தில் உள்ளது போல் DOS பகிர்வுகளை நீக்கிவிட்டு லினக்ஸ் பகிர்வுகளை உருவாக்குவது நல்லது.

D.1.4.3.3. புதிய பகிர்வை உருவாக்குதல்

முன்பே குறிப்பிட்டது போல் பல நேரங்களில் புதிய பகிர்வை உருவாக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருக்கலாம். உங்கள் பகிர்வின் அளவை மாற்றும் மென்பொருளுக்கு லினக்ஸ் புரியும் என்றால் நீங்கள் பகிர்வை நீக்கலாம்.. படம் D-13 அளவு மாற்றத்தை காட்டுகிறது

படம் D-13. வட்டில் இறுதியாக அமைக்கப்பட்ட பகிர்வு

படம் D-13 இல்1அளவு மாற்றத்தை அமைக்கும் முன் 2 பின்

குறிப்புகுறிப்பு
 

x86-சார்ந்த கணினிப்பொறிகளுக்கான தகவல்

உங்கள் வாடிக்கையாளருக்காக நாங்கள் பகுதி பகிர்வு வசதியை அறிமுகப்படுதியுள்ளோம். இது பகிர்வின் அளவை மாற்ற இலவசமாக கிடைக்கும் மென்பொருள்.

பகுதி மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் வன்தகட்டை பகிர்க்க விரும்பினால் வட்டில் தகவல் சேமிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வது நல்லது. உங்கள் கணினியில் உள்ள தகவல்களை இரண்டு முறை காப்பு எடுத்துக்கொள்ளவும்.(நாடா, CD-ROM, or வட்டில்). காப்பு எடுத்த தகவல்கள் படிக்க முடிகிறதா என்று பார்த்துக்கொள்ளவும்.

parted கட்டளையை பயன்படுத்த தீர்மானித்திருந்தால் , நினைவில்கொள்க parted கட்டளை உங்களுக்கு இரண்டு பகிர்வுகளை தரும். ஒன்று நீங்கள் அளவு மாற்றியது மற்றது parted ஐ பயன்படுத்தும் போது புதிதாக உருவானது. காலி இடத்தில் பகிர்வை Red Hat Enterprise Linux நிறுவலுக்கு பயன்படுத்த விரும்பினால், உருவான பகிர்வை பகிர்வுகருவியையோ அல்லது தற்போதுள்ள இயங்குதளம் பயன்படுத்தும் பகிர்வு முறையை கொண்டோ நீக்க வேண்டும்.

D.1.5. பகிர்வுகளுக்கு பெயரிடும் முறை

லினக்ஸ் எண்களையும் எழுத்துக்களையும் பெயரிட பயன்படுத்துகிறது. நீங்கள்"C drive" என்பது போல பெயர்வைத்தால் அது குழப்பதை ஏற்படுத்தும் DOS/விண்டோஸ் கீழ்கண்ட முறையில் பெயர் வைக்கிறது.

  • ஒவ்வொரு பகிர்வும் DOS/விண்டோஸ் இல் படிக்க முடிகிறதா என சோதிக்கும்.

  • ஒவ்வொரு வகையும் சரியாக இருந்தால் "drive letter." பெயரிட்டு "C" ஐத்தொடந்து உங்களுக்கு ஏற்ப பெயர் வைக்கலாம்.

  • இந்த இயக்கியின் பெயர்கள் பகிர்வு மற்றும் அது பயன்படுத்தும் கோப்பு அமைப்பு இரண்டையும் குறிப்பிடும்.

Red Hat Enterprise Linux மற்ற இயங்குதளங்களை போல் அல்லாமல் எளிய பெயரிடல் முறையை பயன்படுத்துகிறது. பெயரிடல் கோப்புகளை பொருத்தது /dev/xxyN.

பகிர்வுகளுக்கு பெயரிடும் முறையை கண்டுபிடிப்பது எப்படி

/dev/

இது எல்லா சாதனம் தொடர்பான கோப்புகளும் இருக்கும் இடம். இந்த பகிர்வு வன்தகட்டில் இருந்தால் வன்தகடும் சாதனமே அதனால் அவை தொடர்பான கோப்புகளும் /dev/ இல் இருக்கும்.

xx

பகிர்வின் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்கள் எது போன்ற சாதனங்கள் பகிர்வில் இருக்கும் என்பதை சொல்லும். பொதுவாக hd (for IDE வட்டு) அல்லதுsd (SCSI வட்டு).

y

எந்த சாதனம் பகிர்வில் உள்ளது உதாரணம் /dev/hda (the first IDE வன்தகடு) அல்லது /dev/sdb (SCSI வட்டு) என்பதை குறிக்கும்.

N

கடைசி எண் பகிர்வை குறிக்கும். முதல் நான்கு (முதன்மை மற்றும் நீட்சி) பகிர்வுகளின் எண்1 லிருந்து 4.தர்கரீதியான பகிர்வுகள் 5. உதாரணமாக /dev/hda3

குறிப்புகுறிப்பு
 

DOS/விண்டோளில் உள்ளது போல் பகிர்வுகளுக்கு பெயரிடுவது அதன் வகையை பொருத்து அல்ல.எல்லா பகிர்வுகளும் Red Hat Enterprise Linux.கீழ் தெரிந்துகொள்ளப்படும். இதற்கு Red Hat Enterprise Linux பகிர்வில் உள்ள தகவல்களை பார்க்க முடியும் என்று அர்தமில்லை. ஆனால் பல சமயங்களில் தகவலை பார்க்க முடியும்

Red Hat Enterprise Linux இல் பகிர்வை உருவாக்கும் முன் இந்த தகவலை நினைவில் கொள்ளவும்

D.1.6. வட்டு பகிர்தல் மற்றும் மற்ற வகை இயங்கு தளங்கள்

உங்கள் Red Hat Enterprise Linux பகிர்வுகள் வன்தகட்டை மற்ற இயங்கு தளத்துடன் பகிர்ந்துகொள்கிறது எனில் உங்களுக்கு சிக்கல் எதுவும் இல்லை. சில சமயம் லினக்ஸ் மற்றும் மற்ற இயங்கு தளத்தோடு ஒப்பிடும் போது கூடுதல் கவனம் தேவை.

D.1.7. வட்டு பகிர்வுகள் மற்றும் துவக்க புள்ளிகள்

புதிதாக லினக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் குழப்பம் எப்படி லினக்ஸ் DOS/விண்டோஸ் கணினி தகவல்களை படிக்கும் என்பதே. லினக்ஸ் இந்த வேலையை சுலபமாக செய்யும்.ஒவ்வொரு பகிர்வும் "drive letter." எடுத்துக்கொள்ளும். பிறகு கோப்புகள் மற்றும் அடைவுகளுக்கு ஏற்ற சரியான இயக்கியின் பெயரை பயன்படுத்திக்கொள்ளவும்

இது லினக்ஸ் பகிர்வுகளை அணுகும் விதத்திலிருந்து மாறுபட்டது.

உதாரணமாக, பகிர்வு /dev/hda5 ஏற்றப்பட்டிருந்தால் /usr/, /usr/ உள்ள அனைத்து கோப்புகளும் /dev/hda5இல் இருக்கும். அதனால் /usr/share/doc/FAQ/txt/Linux-FAQ /dev/hda5 இல் சேமிக்கப்படும், /etc/X11/gdm/Sessions/Gnome சேமிக்கப்படாது.

அதே போல் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைவுகள் /usr/ மற்ற பகிர்வுகளின் துவக்க புள்ளியாக இருந்தால். பகிர்வு (/dev/hda7) /usr/local/ துவக்கப்பட்டிருந்தால், அதாவது /usr/local/man/whatis /dev/hda5. இருப்பதற்கு பதில்/dev/hda7 இருக்கும்

D.1.8. எதனை பகிர்வுகள்?

Red Hat Enterprise Linux நிறுவ தயார்படுத்தும் முன் புதிய இயங்குதளம் பயன்படுத்த வேண்டிய பகிர்வின் அளவை கருத்தில் கொள்ள வேண்டும். "எத்தனை பகிர்வுகள்" என்ற கேள்வி இதுவரை லினக்ஸ் குழுக்களில் விவாதங்களாக மட்டுமே உள்ளது. ஆனால் உங்களுக்கு எத்தனை பகிர்வுகள் வேண்டுமோ அத்தனை பகிர்வுகளை உருவாக்கிக்கொள்ளலாம்.

நீங்கள் உருவாக்கும் பகிர்வுகள் பற்றிய சரியான காரணங்கள் இல்லாதவரை கீழ்கண்ட பகிர்வுகளை உருவாக்குவது நல்லது,swap, /boot/ (அல்லது /boot/efi/ Itanium கணினிகளுக்கான பகிர்வு) , a /var/ Itanium கணினிகளுக்கான பகிர்வு, மற்றும்/ (root).

மேலும் தகவலுக்கு பகுதி 4.16.4 பார்க்கவும்.

குறிப்புகள்

[1]

இவை இந்த படத்தில் உள்ளது போல் ஒரே அளவாக இருக்காது. சராசரி வட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் இருக்கும். தற்சமயத்துக்கு இவைகள் பற்றிய கூடுதல் தகவல்களை தவிர்க்கலாம்