| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் ஏற்றப்படும் போது ஊடகத்தை கேட்கும் திரை தோன்றும். இயக்கி ஊடக திரை கீழ்கண்ட சூழ்நிலைகளில் தோன்றும்
வலைப்பின்னலில் இருந்து நிறுவும் போது
தடுக்கப்பட்ட சாதனத்திலிருந்து நிறுவலை தொடர்ந்தால்
PCMCIA சாதனத்திலிருந்து நிறுவினால்
linux dd உள்ளிட்டு நிறுவலை துவக்கியிருந்தால் (Itanium பயனீட்டாளர்கள் elilo linux dd) ஐ உள்ளிட வேண்டும்
PCI சாதனம் இல்லாத கணினியில் நிறுவல் நிரைலை இயக்கி இருந்தால்
இயக்கி ஊடகம் வன்பொருள் மற்றும் மென்பொருளுக்கான ஆதரவை தரலாம் அல்லது தராமல் போகலாம். இயக்கி ஊடகத்தில் அதற்கான வட்டு அல்லது Red Hat பிம்பம் இருக்க வேண்டும்; இந்த வட்டைஈ அல்லது சிடிராம் ஐ இணையத்திலிருந்து பெற்ற கோப்பிலிருந்து உருவாக்கலாம் அல்லது வன்பொருள் விற்பனையாளர்களிடமிருந்து வாங்கலாம்
குறிப்பிட்ட Red Hat Enterprise Linux ஐ நிறுவ தேவையான சாதனத்தை அணுக இயக்கி ஊடகம் பயன்படுகிறது. இவைகள் (NFS) வலைப்பின்னல் நிறுவலுக்கு பயன்படும், PCMCIA அல்லது பகுதி சாதன மற்றும் தரப்பட்டியலில் இல்லாத CD-ROM இயக்கிகள், SCSI ஏற்பிகள் NIC மற்றும் மற்ற சாதனங்களிலும் பயன்படும்.
![]() | குறிப்பு |
|---|---|
ஆதரவற்ற சாதனம் Red Hat Enterprise Linux ஐ நிறுவ அவசியமில்லை; உங்கள் கணினிலில் நிறூவலை தொடர புதிய சாதனத்தை பட்டியலில் சேர்த்து அதற்கான ஆதரவை பெறவும் |
வட்டிற்கான பிம்பங்களை பல வழிகளில் பெற முடியும். Red Hat Enterprise Linux உடன் சேர்த்தோ அல்லது வன்பொருள் , மென்பொருள் விற்பனையாளர்களிடமிருந்தோ அல்லது இணைய தளத்திலிருந்தோ பெற முடியும். வட்டை அல்லது CD-ROM ஐ Red Hat Enterprise Linux நிறுவலுக்கு முன் உருவாக்க வேண்டும்.
x86-அடிப்படையிலான கணினி பயனீட்டாளர்கள் Red Hat Enterprise Linux CD #1 இல் இயக்கி பிம்பம் இருக்க வேண்டும். (images/drvnet.img — வலைப்பின்னல் இடைமுக அட்டை மற்றும் images/drvblock.img — அதற்கான இயக்கிகள் SCSI கட்டுப்படுத்திகள்)மற்றும் பல இயக்கிகள் (பொதுவான மற்றும் தெளிவற்ற).
![]() | குறிப்பு |
|---|---|
வலைப்பின்னல் கோப்பு வழியாக இயக்கி கோப்பை பயன்படுத்த முடியும். இவைகளை linux dd துவக்க கட்டளையை பயன்படுத்துவதற்கு பதில் linux dd=url கட்டளையை பயன்படுத்தலாம் url HTTP, FTP, அல்லது NFS இவைகளில் உள்ள இயக்கி பிம்பங்கள் |
Red Hat' இல் உள்ள சிறப்பு இயக்கிகள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள உதவும் வலைமனை
http://www.redhat.com/support/errata/ |
பிழைகளை திருத்துதல் பகுதியில். வன்பொருள் Red Hat Enterprise Linux வெளியிட்ட பின் அதற்கான இயக்கி நிறுவல் நிரலில் இல்லையெனில் அல்லது Red Hat Enterprise Linux CD #1 இயக்கி வட்டில் இல்லையென்றாலும் வலைதளத்தை பார்த்து இயக்கிகளை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
Red Hat Enterprise Linux இல் உள்ள இயக்கி பிம்பத்தை பயனபடுத்து இயக்கு வட்டுகளை உருவாக்க முடியும்
காலி, வடிவமைக்கப்பட்ட வட்டை (அல்லது Itanium கணினிக்கான LS-120 வட்டு ) முதல் வட்டை (அல்லது LS-120) ஐ சொருகவும்
வட்டு இயக்கி பிம்பம் உள்ள அடைவில், root ஆக drvnet.img, dd if=drvnet.img of=/dev/fd0தட்டச்சு செய்யவும்
இயக்கி பிம்பத்தை பயன்படுத்த விரும்பினால் அதாவது PCMCIA சாதனம் அல்லது NFS நிறுவல் , நிரல் இயக்கியை சொருக நினைவூட்டும்(வட்டின் பெயர், CD-ROM, அல்லது கோப்பின் பெயர்)
எனினும், சில சமயங்களில் நிறுவல் நிரம் இயக்கி வட்டை ஏற்றி நிறுவலை தொடரும் போது்கள் பொருளின் பெயரை Red Hat Enterprise Linux வெளிப்படையாக குறிப்பிட வேண்டியிருக்கும்.
உதாரணமாக, நீங்கள் உருவாக்கிய வட்டை பயன்படுத்தி Red Hat Enterprise Linux CD #1 லிருந்து நிறுவலை துவக்க (அல்லது துவக்க மீடியாவிலிருந்து) x86-அடிப்படையிலான கணினிகளுக்கு boot: ப்ராம்டில், linux dd ஐ உள்ளிடவேண்டும்,x86 அல்லது x86-64 கணினிகளுக்கு. பகுதி 4.3.1 இணைய தளத்தை பார்க்கவும். Itanium கணினிக்குShell> ப்ராம்டில், elilo linux ddஎன்பதை தட்டச்சு செய்யவும்.நிறுவல் நிரல் பற்றிய விவரங்களுக்கு பகுதி 4.3.2 பார்க்கவும்.
Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் இயக்கி வட்டை சொருக நினைவூட்டும். நிறுவல் நிரல் வட்டை படித்ததும், அவைகளை உங்கள் கணினியில் உள்ள வன்பொருளுக்கு ஏற்ப உரிய நேரத்தில் பயன்படுத்தும்.