D.3. நிறுவிய பின் ஏற்படும் சிக்கல்கள்

D.3.1. தொலை வரைகலை மேல்மேசை மற்றும் XDMCP

நீங்கள் X விண்டோஸ் கணினியை நிறுவியிருந்தால் Red Hat Enterprise Linux வரைகலை உள்நுழை மேலாண்மையை பயன்படுத்தி கணினிக்குள் நுழைய விரும்பினால் X Display Manager Control Protocol (XDMCP) ஐ செயல்படுத்தவும். இந்த விதிமுறை உங்கள் மேல்மேசையில் தொலை கணினி(அதாவது வலையுடன் இணைக்கப்பட்ட கிளையன் கணினிகள்) நுழைய பயன்படும். தொலை XDMCP, ஐ செயல்படுத்த Red Hat Enterprise Linux கணினியில் உள்ள /etc/X11/gdm/gdm-config கோப்பில் உள்ள சில வரிகளில் vi அல்லது nano தொகுப்பியை பயன்படுத்தி மாற்றங்கள் செய்ய வேண்டும். அதற்கு

[xdmcp]

Enable=false

Enable=true என திருத்தி கோப்பை சேமித்து வெளியேறவும். runlevel 5 என மாற்றி X சேவகனை மீண்டும் துவக்கவும்

/sbin/init 5

கிளையன் கணினியிலிருந்து, தொலை X அமர்வை X. பயன்படுத்தி துவக்கவும். உதாரணம்.

X :1 -query s390vm.example.com

கட்டளை XDMCP வழியாக தொலை X சேவகனுடன் இணைய(s390vm.example.com ஐ தொலை X சேவகனில் புரவலன் பெயரால் மாற்றவும்) மற்றும் தொலை வரைகலை உள்நுழை :1கிளையனின் திரையை காட்டும் ([Ctrl]-[Alt]-[F8] விசையை ஒரு சேர பயன்படுத்தினால் கிடைக்கும்)

nested X சேவகன் கட்டளையை பயன்படுத்தி தொலை மேல்மேசையை உங்கள் தற்போதைய அமர்விலும் பார்க்க முடியும். Xnest கட்டளையை உங்கள் X அமர்வில் உள்ளிட வேண்டும். உதாரணமாக, Xnest கட்டளையை கீழ்கண்ட கண்ட கட்டளையை பயன்படுத்தி இயக்கவும். இங்கே s390vm.example.com உங்கள் புரவலன் பெயரால் மாற்றப்படும்.

Xnest :1 -query s390vm.example.com

D.3.2. உள்நுழைய முயலும் போது சிக்கல்

அமைப்பு முகவர் இல் பயனர் கணக்கை உருவாக்கவில்லையெனில், முதன்மை பயனராக நுழைந்து நீங்கள் ரூட்டுக்காக கொடுத்த கடவுச்சொல்லை பயன்படுத்தவும்

முதன்மை பயனர் கடவுச்சொல் உங்களுக்கு நினைவில்லையெனில், உங்கள் கணினியை linux single என துவக்கவும்.

ஒரு பயனர் பாங்கை அடைந்ததும் # ப்ராம்ட் தெரியும். இங்கே passwd root என தட்டச்சு செய்ய வேண்டும். இதன் மூலம் முதன்மை கடவுச்சொல் நிரந்தரமாக மாற்றப்படும். பின் shutdown -r now என தட்டச்சு செய்து கணினியை மீண்டும் துவக்கவும்.

உங்கள் பயனர்கணக்கு கடவுச்சொல்லை நீங்கள் மறந்திருந்தால் , முதன்மை பயனராக கணினியில் நுழையவு. இவ்வாறு நுழைய su - என்ற கட்டளையை தட்டச்சு செய்து பின் கடவுச்சொல்லை உள்ளிடவும். பிறகு passwd <username> என தட்டச்சு செய்யவும். இது புது பயனருக்கான புதிய கடவுச்சொல்லை கேட்கும். கடவுச்சொல்லை உள்ளிடவும்

வரைகலை உள்நுழை திரை தோன்றவில்லையெனில. உங்கள் வன்பொருள் பொருந்தவில்லையா என்பதை பார்க்கவும். வன்பொருள் பட்டியல் ஐ காண:

http://hardware.redhat.com/hcl/

D.3.3. உங்கள் அச்சியந்திரம் வேலை செய்யவில்லை

உங்களுக்கு அச்சியந்திரத்தை அமைக்க தெரியவில்லை அல்லது அச்சியந்திரம் சரியாக வேலை செய்யவில்லையெனில், அச்சியந்திரம் அமைக்கும் கருவி பயன்பாட்டை பயன்படுத்தவும்.

system-config-printer கட்டளையை கட்டளை வரியில் தட்டச்சு செய்யவும். அச்சியந்திரம் அமைக்கும் கருவி திறக்கும். முதன்மை பயனர் இல்லை எனில் ரூட் கடவுச்சொல் கேட்கும்.

D.3.4. அப்பாச்சி-அடிப்படையிலான httpd service/Sendmail துவங்கும் போது நின்றுவிட்டது.

அப்பாச்சி-அடிப்படையிலான httpd சேவை அல்லது Sendmail துவங்கும் போது நின்றுவிட்டது எனில் /etc/hosts கோப்பில் கீழ்கண்ட வரி இருக்கிறதா என பார்க்கவும்.

127.0.0.1  localhost.localdomain  localhost