| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
வலைப்பின்னல் சாதனம் உங்களிடம் இல்லையெனில் , நிறுவலின் போது இந்த திரை தோன்றாமல் உங்களை தானாக பகுதி 2.15 க்கு அழைத்துச்செல்லும்.
நிறுவல் நிரல், வலைப்பின்னல் சாதனத்தை தானாக கண்டறிந்து, வலைப்பின்னல் சாதனங்கள் பட்டியலில் காட்டும்
தேவையான வலைப்பின்னல் சாதனத்தை தேர்வு செய்த பின் திருத்து என்பதை தேர்வு செய்தால் ஒரு சாளரம் தோன்றும் அதில் DHCP வழியாக தேவையான IP முகவரி மற்றும் நெட்மாஸ்க் முகவரியை தேர்வு செய்யும் என்பதையும், (தானாக முகவரியை தேர்வு செய்யவும்) துவங்கும் போதே வலை இணைப்பை துவக்குவதற்கான தேர்வையும் தேர்வு செய்யவும். துவங்கும் போதே இணையத்தை துவக்கு; உங்கள் வலைப்பின்னலை கணினியை, துவக்கும் போதே துவக்க உதவும். உங்களிடம் DHCP கிளையன் அமைப்பு இல்லையெனில் வலைப்பின்னல் மேலாளரை அணுகவும்.
![]() | குறிப்பு |
|---|---|
CTC/Escon சாதனத்திற்கு ஏற்ற DHCP சேவை இல்லை. இம்மாதிரி சாதனங்களை அமைக்க அடுத்தடுத்த முகவரிகள் பயன்படும். |
![]() | குறிப்பு |
|---|---|
உதாரணத்தில் தரப்பட்ட எண்ணை பயன்படுத்த வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வலைப்பின்னலை அமைக்க இந்த மதிப்புகள் பயன்படாது. உள்ளிடப்பட வேண்டிய மதிப்புகள் பற்றி உறுதியாக தெரியவில்லை என்றால் உங்கள் வலைப்பின்னல் மேலாளரை அணுகவும். |
வலைப்பின்னல் சாதனத்திற்கான புரவலன் பெயர் தெரிந்தால் (தகுந்த பெயர்) அதை உள்ளிடவும். DHCP (Dynamic Host Configuration Protocol) ஐ தேர்வு செய்தால் புரவலன் பெயர் தானாக தேர்வு செய்யப்படும், அல்லது கொடுக்கப்பட்ட இடத்தில் நீங்களாக புரவலன் பெயரை உள்ளிடவேண்டும்
IP மற்றும் நெட்மாஸ்க் முகவரிகளை உள்ளிட்ட பின் நுழைவாயிலுக்கான முகவரி , முதன்மை , இரண்டாவது மற்றும் மூன்றாவது DNS சேவகனின் பெயரையும் உள்ளிடவும்.
![]() | சிறு குறிப்பு |
|---|---|
உங்கள் கணிப்பொறி வலைப்பின்னலில் இல்லையென்றாலும் புரவலன் பெயரை உள்ளிடுவது நல்லது. இல்லையேல் உங்கள் கணிப்பொறி localhost. என்ற பெயரால் அழைக்கப்படும். |
![]() | சிறு குறிப்பு |
|---|---|
நிறுவல் முடிந்த பின் வலைப்பின்னலை அமைக்க வலைப்பின்னல் மேலாளர் கருவி ஐ பயன்படுத்தவும். system-config-network கட்டளையை செல்லின் தட்டச்சு செய்து வலைப்பின்னல் மேலாளர் கருவி துவக்கவும். நீங்கள் roo பயனீட்டாளர் இல்லையெனில் அதற்கான கடவுச்சொல்லை உள்ளிடவும். |