2.18. Root கடவுச்சொல்லை அமை

நிறுவலின் போது root பயனீட்டாளருக்கான root அடைவை தேர்வு செய்வதும் கடவுச்சொல்லை அமைப்பதும் முக்கியமான பணியாகும். root பயனீட்டாளரின் வேலை வின்டோஸ் என்டியில் மேளாளர் மேற்கொள்ளும் வேலையை ஒத்தது. இதைக்கொண்டு புதிய மென்பொருள்களை நிறுவுதல், மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை பணிகளை செய்யமுடியும்.

குறிப்புகுறிப்பு
 

root பயனீட்டாளர்(மேலாளர்) கணிப்பொறியை முழுமையாக கையாளும் உரிமை உடையவர். root பயனீட்டாளராக கணினியில் நுழைவது மேலாண்மை மற்றும் கட்டுப்படுத்தளுக்கு மட்டுமே.

படம் 2-15. Root கடவுச்சொல்

மேலாண்மைக்கு மட்டும் root கணக்கை பயன்படுத்தவும். பொதுவான பயனீட்டாளருக்கு தனி கணக்கை உருவாக்கிக்கொள்ளவும். தேவைப்பட்டால் su - கட்டளையை பயன்படுத்தி root பயனீட்டாளர் கணக்கிற்கு செல்லவும். இதனால் அறியாமல் செய்யும் பிழைகளால் கணினி பாதிக்கப்படாது.

குறிப்புசிறு குறிப்பு
 

root பயனீட்டாளராக கன்சோல் அல்லது டெர்மினலில் su - தட்டச்சு செய்து [Enter ] விசையை அழுத்தவும். root என்பதை உள்ளிட்டு மீண்டும் [Enter ] விசையை அழுத்தவும்.

நிறுவல் நிரல் உங்களை root கடவுச்சொல்லை அமைக்க வலியுருத்தும் [1] உங்கள் கணினியில் root பயனீட்டாளருக்கான கடவுச்சொல்லை உள்ளிடாமல் நிறுவலை தொடர முடியாது

root பயனீட்டாளருக்கான கடவுச்சொல்லில் ஆறு எழுத்தாவதுவது இருக்கவேண்டும். நீங்கள் உள்ளிடும் கடவுச்சொல் கணினி திரையில் காட்டப்படாது. கடவுச்சொல்லை இரண்டு முறை உள்ளிட வேண்டும். இரண்டு முறை உள்ளிடும்போது வேறுபாடு ஏதேனும் இருந்தால் நிறுவல் நிரல் உங்களை கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடச்சொல்லும்.

உங்கள் கடவுச்சொல் உங்களுக்கு எளிதாகவும் மற்றவர்கள் கண்டுபிக்க முடியாதபடியும் இருக்கவேண்டும். உங்கள் பெயர், தொலைபேசி எண், qwerty, password, root, 123456, மற்றும் anteater இவை எல்லாம் மோசமான கடவுச்சொல்லுக்கான உதாரணங்கள். சிறந்த கடவுச்சொல் பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண்கள் போன்றவற்றின் கலவையாக இருக்கும் Aard387vark அல்லது 420BMttNTஇவை எல்லாம் சிறந்த கடவுச்சொல்லுக்கான உதாரணங்கள். கடவுச்சொல் பெரிய எழுத்து , சிறிய எழுத்துக்களை வேறுபடுத்தி அறிந்து கொள்ளும். கடவுச்சொல்லை எங்கும் எதிலும் எழுதிவைக்காமல் மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது.

குறிப்புகுறிப்பு
 

இந்த கையேட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டாம். இந்த கடவுச்சொற்களை பயன்படுத்துவது பாதுகாப்பான வழிமுறை அல்ல.

குறிப்புசிறு குறிப்பு
 

நிறுவல் முடிந்ததும் root பயனீட்டாளர் கடவுச்சொல்லை மாற்ற மூல கடவுச்சொல் அமைக்கும் கருவி ஐ பயன்படுத்தவும்.

கன்சோல் அல்லது டெர்மினலில் system-config-rootpassword கட்டளையை தட்டச்சு செய்து மூல கடவுச்சொல் அமைக்கும் கருவி ஐ துவக்கவும். நீங்கள் root இல்லை என்றால் கணினி root க்கான கடவுச்சொல்லை கேட்கும். கடவுச்சொல்லை உள்ளிட்டு தொடரவும்.

குறிப்புகள்

[1]

root கடச்சொல் Red Hat Enterprise Linux இன் மேலாளருக்கான கடவுச்சொல்லாகும். கணினியை கண்காணிக்க மட்டும் root கணக்கை பயன்படுத்த வேண்டும், இதில் சாதரண பயனீடாளர் கணக்கில் உள்ளது போல் தடை எதுவும் இல்லை.