2.2. உரைமுறை நிறுவல் நிரல் இடைமுகம்

Red Hat Enterprise Linux உரை முறை நிறுவல் திரை-அடிப்படையிலான சிறு சாளர widgets வரைகலை பயனர் இடைமுகத்தை பயன்படுத்துகிறது படம் 2-2, மற்றும் படம் 2-3, நிறுவலின் போது திரை எவ்வாறு இருக்கும் என பார்க்கலாம்.

குறிப்புகுறிப்பு
 

உரை முறை நிறுவல் பற்றிய ஆவணங்கள் சரிவர இல்லை எனில் GUI நிறுவல் நிரலில் உள்ள ஆவணங்களை பின்பற்றி உரை நிறுவலை புரிந்துகொள்ளலாம்.

படம் 2-2. துவக்க ஏற்றி அமைப்பு உள்ளது போன்ற நிறுவல் நிரல் சிறு சாளரம்

படம் 2-3. வட்டு ரூயிட் உள்ளது போன்ற நிறுவல் நிரல் சிறு சாளரம்

இங்கே முக்கியமான சிறுசாளரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது படம் 2-2 மற்றும் படம் 2-3:

2.2.1. விசைப்பலகையை பயன்படுத்தி உலாவல்

சில விசைப்பலகை விசைகளை பயன்படுத்தி நிறுவல் நிரலில் சுலபமாக உலாவ முடியும். [இடது], [வலது], [மேல்], மற்றும் [கீழ்] அம்புக்குறிகளை பயன்படுத்தலாம். [டாப்], மற்றும் [Alt]-[டாப்] விசைகளை பயன்படுத்தி முன் மற்றும் அடுத்த சாளரத்திற்கு நகரலாம். பொதுவாக திரையின் கீழ் செயல்பாட்டிற்கு தேவையான விசைகள் பற்றிய விரங்கள் இருக்கும்.

பட்டனை "அழுத்த" , கர்சரை பட்டனின் மேல் வைத்து (உதாரணமாக [டாப்], விசையை கொண்டு) [Space] அல்லது [Enter] ஐ அழுத்தவும். பட்டியலிலிருந்து குறிப்பிட்ட உருப்படியை தேர்வு செய்ய கர்சரை குறிப்பிட்ட இடத்திற்கு நகர்த்தில்[Enter] விசையை அழுத்தவும். சோதனைப்பெட்டியில் உள்ள உருப்படியை தேர்வு செய்ய கர்சரை தேவையான இடத்தில் வைத்து [Space] விசையை அழுத்தவும். தேர்வு செய்ததை நீக்க [Space] விசையை இரண்டாவது முறை அழுத்தவும்.

[F12] தற்போதைய மதிப்பு ஏற்கப்பட்டு அடுத்த திரைக்கு செல்லும் .அதாவது இந்த விசை சரி பட்டனைப்போல வேலை செய்யும்.

எச்சரிக்கைஎச்சரிக்கை
 

நிறுவலின் போது உரையாடல் பெட்டி உரைக்காக காத்திருக்கும் போது வேறு எந்த விசையும் செயல்படாது.(வேறு விசைகள் செயல்பட்டால் உத்தேசிக்க முடியாத செயல்கள் நிகழலாம்)