2.12. வட்டு பகிர்வுகளின் நிறுவல்

பகிர்வுகள் உங்கள் வன்தகட்டை பகுதிகளாக பிரித்து தனித்தனி வன்தகடாக இயங்க அனுமதிக்கும். பகிர்வுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்கு தளங்களை உங்கள் கணினியில் நிறுவ அனுமதிக்கும் உங்கள் கணினியில் பகிர்வுகளை உருவாக்குவதில் குழப்பம் ஏதேனும் இருந்தால் இணைப்பு C ஐ படித்து தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

இந்த திரையில் Disk Druid ஐ பயன்படுத்தி தானாக பகிர்வுகளை உருவாக்க வேண்டுமா அல்லது நீங்களே உருவாக்கிகொள்ள விருப்பமா என்பதை தேர்வு செய்யவும்.

வன்தகட்டில் பகிர்வுகளை உருவாக்குவதில் சிக்கல் ஏதும் இருந்தால் தானாக பகிர்வுகளைஉருவாக்கும் தேர்வை பயன்படுத்தவும். நானே பகிர்வை உருவாக்கி கொள்கிறேன் என்ற தேர்வை பயன்படுத்த வேண்டாம்.

நீங்களே பகிர்வுகளை உருவாக்கிகொள்ள Disk Druid கருவியை பயன்படுத்தவும்.

படம் 2-10. வட்டு பகிர்வுகளின் நிறுவல்

நீங்களே பகிர்வுகளை உருவாக்க பகுதி 2.14 ஐ குறிக்கும் Disk Druid ஐ பயன்படுத்தவும்

எச்சரிக்கைஎச்சரிக்கை
 

நிறுவலின் போது வட்டு பகிர்வின் அமைப்பில் கீழ்கண்ட பிழை ஏதேனும் இருந்தால்

அதாவது பகிர்வு அட்டவணை உள்ள இயக்கி hda படிக்க முடியவில்லை. புதிய பகிர்வை உருவாக்க வன்தகட்டை துவக்க வேண்டும், இதனால் வட்டில் உள்ள அனைத்து தகவல்களையும் இழக்க நேரிடலாம்

உங்கள் வட்டில் பகிர்வு அட்டவணை இல்லை அல்லது நிறுவலின் போது பகிர்வுக்காக நீங்கள் பயன்படுத்திய மென்பொருளை இயக்கியால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று பொருள்.

எந்த விதமான நிறுவல் முறையை பின்பற்றினாலும் நிறுவலுக்கு முன் தகவல்களை காப்பு எடுப்பது நல்லது