| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
நீங்கள் தானாக பகிர்வு செய்வதை தேர்வு செய்திருந்தால்,மீண்டும் பார் என்பதை தேர்வு செய்யவில்லையெனில் பகுதி 2.15 க்கு செல்லவும்.
தானாக பகிர்வு செய்வதை தேர்வு செய்து மீண்டும் பார் என்பதை தேர்வு செய்திருந்தால்; தற்போதைய பகிர்வை ஏற்கலாம்(அடுத்து பட்டனை க்ளிக் செய்யவும்), அல்லது வட்டு ரூயிட் ஐ பயன்படுத்தி கைமுறையாக பகிர்வை உருவாக்கலாம்.
நிறுவல் நிரலில் Red Hat Enterprise Linux எங்கே நிறுவ வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். Red Hat Enterprise Linuxநிறுவப்பட வேண்டிய இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏற்றப்புள்ளிகளை குறிப்பிடுவதன் மூலம் இதை செய்யமுடியும்.
![]() | குறிப்பு |
|---|---|
உங்கள் பகிர்வுகளை எப்படி உருவாக்குவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையெனில் இணைப்பு C மற்றும் பகுதி 2.14.4ஐ பார்க்கவும். குறைந்த பட்சம் root பகிர்வின் அளவையும், (/) , /boot/பகிர்வையும் குறிப்பிடவேண்டும் iSeries அல்லாத கணினியில் (iSeries /boot/ பகிர்வு தேவையில்லை), PPC PReP துவக்க பகிர்வு, மற்றும் ஸ்வாப் பகிர்வு RAM அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். iSeries பயனர்களுக்கு மட்டும்: PReP துவக்க அடைவை முதன்மை அல்லது காப்பு துவக்க முறையாக அமைப்பது நல்லது PReP பகிர்வின் அளவு 16 முதல் 32 MB வரை இருக்க வேண்டும் மேலும் முதன்மை பகிர்வு செயலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். |
வட்டு ரூயிட் நிறுவலின் போது பயன்படுத்தப்படும் வட்டு பகிர்வு கருவி. வட்டு ரூயிட் தேவையான சூழலுக்கு ஏற்ப பகிர்வுகளை உருவாக்க பயன்படும் சாதனம்.
வட்டு ரூயிட் உங்கள் வன்தகடு(கள்) எப்படி இருக்கும் என காட்டும்.
குறிப்பிட்ட புலத்தை தனிப்படுத்த, உங்கள் சுட்டியை பயன்படுத்தி ஒருமுறை க்ளிக் செய்யவும். ஏற்கெனவே உள்ள புலத்தில் திருத்தம் செய்ய இரண்டு முறை க்ளிக் செய்யவும் அல்லது காலி இடத்தில் புதிய பகிர்வை உருவாக்க.
காட்சிக்கு மேல் இயக்கி பெயர் (அதாவது /dev/hda ), Geom (இதில் வன்தகட்டின் 3 வடிவமைப்புகள் இருக்கும் அதாவது சிலிண்டர்கள்,தலைகள் மற்றும் செக்டார்கள்), மற்றும் நிறுவல் நிரல் கண்டறிந்த வன்தகட்டின் மாதிரி ஆகியவை இருக்கும்.
இந்த பட்டன் கட்டுபடுத்தி வட்டு ரூயிட்செயல்கள், பகிர்வின் பண்புகளை மாற்ற (உதாணமாக கோப்பு வகை ஏற்ற புள்ளி ) மற்றும் RAID சாதனங்களை உருவாக்க பயன்படும். நீங்கள் செய்த மாற்றங்களை ஏற்கவும், வட்டு ரூயிட் லிருந்து வெளியேறவும் இந்த திரையில் உள்ள பட்டன்கள் பயன்படும்.
புதிய: புதிய பகிர்வுகளை உருவாக்க பயன்படும். இதை தேர்வு செய்ததும் தோன்றும் உரையாடல் பெட்டியில் புலங்கள் இருக்கும் (ஏற்றபுள்ளி, அளவு ஆகியவை) அவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
திருத்து: பகிர்வுகள் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட பகிர்வுகளின் பண்புகளை மாற்ற இந்த பட்டன் உதவும். திருத்து பட்டனை தேர்வு செய்ததும் உரையாடல் பெட்டி தோன்றும்.இதில் உள்ள சில அல்லது அனைத்து புலங்களையும் திருத்தி அமைக்கலாம்.
காலி இடங்களை பயன்படுத்தி புதிய பகிர்வுகளை உருவாக்கவும் முடியும். காலி இடத்தை தேர்வு செய்து திருத்து பட்டனை அழுத்தி மாற்றங்கள் செய்யவும்
RAID சாதனத்தை உருவாக்க மென்பொருள் RAID பகிர்வை உருவாக்கவேண்டும் (அல்லது ஏற்கெனவே உள்ள பகிர்வை பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கும் மேற்பட்ட RAID பகிர்வுகளை உருவக்கிய பின் RAID உருவாக்கு பட்டனை க்ளிக் செய்து அவைகளை RAID பகிர்வில் சேர்க்கவும்.
நீக்கு: தற்போதைய வட்டு பகிர்வுகள் உள்ள பகிர்வுகளை நீக்க பயன்படும். பகிர்வுகளை நீக்கும் போது அதை உறுதிப்படுத்த கேட்கும்
மீட்டமை: வட்டு ரூயிட் உண்மை நிலையை மீட்க பயன்படும்.மீட்டமை பட்டனை பயன்படுத்தினால் நீங்கள் செய்த மாற்றங்கள் அனைத்தையும் இழக்க நேரும்.
RAID: பகிர்வுகளுக்கு தற்காப்பு இடத்தை தர பயன்படும். RAID பயன்படுத்திய அனுபவம் இருந்தால் இதை பயன்படுத்தலாம். RAID, பற்றி அதிகம் தெரிந்து கொள்ள Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு. ஐ பார்க்கவும்.
RAID சாதனத்தை அமைப்ப நீங்கள் RAID மென்பொருள் பகிர்வை உருவாக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட RAID பகிர்வுகளை உருவாக்கிய பின் RAID பட்டனை தேர்வு செய்து அந்த பகிர்வுகளை RAID சாதனத்துடன் இணைக்கவும்.
LVM: LVM லாஜிக்கல் இடங்களை உருவாக்க பயன்படும். LVM (Logical Volume Manager) பிசிக்கல் சேமிப்பகங்களின் லாஜிகல் பண்புகளை அறிய இது பயன்படும். LVM தனிப்பட்ட வட்டுகளை — மேலாண்மை செய்ய அதாவது வட்டில் உள்ள பகிர்வுகளை மேலாண்மை செய்ய பயன்படும். LVM பகிர்வுகளை உருவாக்கிய அனுபவம் இருந்தால் மட்டுமே இவைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு ஐ பார்க்கவும். குறிப்பு, LVM வரைகலை நிறுவல் நிரலில் மட்டுமே உள்ளது.
LVM லாஜிகள் இடங்களை உருவாக்க, பிசிக்கல் (LVM) வால்யூம் வகை பகிர்வை உருவாக்க வேண்டும். பிசிகள் (LVM) களை உருவாக்கிய பின் LVM ஐ தேர்வு செய்து லாஜிகல் வால்யூம்களை உருவாக்க வேண்டும்
பகிர்வு வரிசைக்கு மேல் உங்கள் பகிர்வு மற்றும் அவைகள் உருவாக்கம் பற்றிய தகவல் அடங்கிய அடையாள சீட்டு இருக்கும். இந்த அடையாளங்கள் கீழ்கண்டது போல் குறிக்கப்படும்.
சாதனம்: இந்த புலம் பகிர்வு சாதனத்தின் பெயரை குறிப்பிடும்
ஏற்ற புள்ளி/RAID/Volume: ஏற்ற புள்ளி வட்டின் இடங்களை அடைவில் குறிப்பிட பயன்படும்; வட்டின் இடம் பற்றிய தகவல்"mounted" இல் இருக்கும். இந்த புலம் பகிர்வு ஏற்றப்பட்ட இடத்தை பற்றிய தகவலையும் தரும். எற்கெனவே பகிர்வு இருந்தும் அவை அமைக்கப்படவில்லை எனில் ஏற்ற புள்ளிகளை நீங்களாக குறிப்பிடவேண்டும் அதற்கு திருத்து பட்டனை இரண்டு முறை க்ளிக் செய்யவும்.
வகை: இந்த புலம் பகிர்வு கோப்பு அமைப்பின் வகையை குறிப்பிடும்(உதாரணம், ext2 அல்லது ext3 ).
வடிவமைப்பு: இந்த புலம் உருவாக்கப்பட்ட பகிர்வுகளை வடிவமைக்க பயன்படும்
அளவு (MB): இந்த புலம் பகிர்வின் அளவை குறிக்கும் (MB யில்).
துவக்கம்:பகிர்வு துவங்கும் போது உங்கள் வன்தகட்டில் உள்ள உருளைகளை காட்டும்
முடிக்கவும்: இந்த புலம் உங்கள் வன்தகட்டில் பகிர்வு முடியும் இடத்தை குறிக்கும்.
RAID சாதனத்தை மறை/LVM அளவு குழு உறுப்பினர்கள்: RAID சாதனங்கள் அல்லது LVM குழு உறுப்பினர்களை உருவாக்கும்.
சரியான காரணத்தை குறிப்பிடவில்லையெனில் , கீழ்கண்ட பகிர்வுகளை உருவாக்க பரிந்துரைக்கிறோம்.
ஸ்வாப் பகிர்வு (குறைந்தபட்சம் 256 MB) — மெய்நிகர் நினைவகத்திற்கான ஆதரவை தர பயன்படுகிறது. RAM இல் போதிய இடமில்லாத போது தவகல்கள் இந்த ஸ்வாப் பகிர்வில் எழுதப்படும்.
ஸ்வாப் பகிர்வின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என தெரியவில்லையெனில் உங்கள் கணினியில் RAM அளவைவிட இரு மடங்காக வைக்கவும்.(ஆனால் 2 GB க்குள் இருக்க வேண்டும்).இதன் வகை ஸ்வாப் என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
ஸ்வாப் அளவை உருவாக்குவது கீழ்கண்ட காரணங்களால் மாறுபடும்(தேவைக்கேற்ப வரிசைப்படி)
கணினியில் இயங்கிக்கொண்டிருக்கும் பயன்பாடுகள்
கணினியில் உள்ள RAM இன் அளவு
OS இன் பதிப்பு
பொதுவாக ஸ்வாப் அளவு 2x பிசிக்கல் RAM அளவு வரை அல்லது 2GB வரை இருக்கலாம். RAM அளவு 2 GB க்கு மேல் இருந்தால் 1x பிசிக்கல் RAM என கொள்ள வேண்டும் ஆனால் 32 MB யை விட குறைவாக இருக்ககூடாது.
இந்த சமன்பாட்டின் படி 2 GB பிசிகல் RAM உள்ள கணினியில் ஸ்வாப் அளவு 4 GB எனவும் 3GB பிசிகல் RAM உள்ள கணினியின் ஸ்வாப் அளவு 5 GB யாகவும் உருவாக்கவேண்டும். இவ்வாறு ஸ்வாப் அளவை அதிகமாக அமைப்பது பிற்காலத்தில் RAM அளவை அதிகரிக்க வசதியாக இருக்கும்.
![]() | சிறு குறிப்பு |
|---|---|
உங்கள் பகிர்வு முறைக்கு 2 GB அளவை விட பெரிய ஸ்வாப் பகிர்வு தேவை எனில் கூடுதல் ஸ்வாப் பகிர்வுகளை உருவாக்கலாம். உதாரணமாக, உங்களிடம் 4 GB RAM இருந்தால், இரண்டு 2 GB ஸ்வாப் பகிர்வுகளை உருவாக்கிக்கிகொள்ளாம். Red Hat Enterprise Linux இல் 32 ஸ்வாப் கோப்புகளுக்கு ஆதரவு உண்டு. |
அதிக அளவு RAM உள்ள கணினிகளில் (32 GB க்கு மேல்) குறைந்த அளவுள்ள ஸ்வாப் பகிர்வுகளை உருவாக்க வேண்டிவரலாம்(1x, அல்லது பிசிக்கல் RAM அளவை விட சிறிய)
PPC PReP துவக்க பகிர்வு வன்தகட்டின் — முதல் பகிர்வாகும். PPC PReP இல் இயங்குதளத்தின் கர்னல் இருக்கும்(iSeries கணினிகளில்) அல்லது YABOOT துவக்க இயக்கி (மற்ற திறன் வாய்ந்த கணினிகளில் Red Hat Enterprise Linux) யில் இருக்கும். iSeries கணினி தவிர மற்ற திறன் வாய்ந்த கணினியில் : நீங்கள் Red Hat Enterprise Linux. ஐ துவக்க நெகிழ்வட்டையோ அல்லது வலைப்பின்னலையோ பயன்படுத்தாத போது PPC PReP துவக்க பகிர்வை பயன்படுத்த வேண்டும்.
ஓப்பன் பவர், p5, i5, மற்றும் pSeries பயனர்களுக்கு: PPC PReP பகிர்வு 4-8 MB, வரை இருக்கலாம் 10 MBக்கு மேல் இருக்கக்கூடாது.
iSeries பயனர்களுக்கு: முதன்மை அல்லது காப்பு துவக்க முறைமையில் p a PPC PReP துவக்க பகிர்வை உருவாக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. PPC PReP துவக்க பகிர்வு 16லிருந்து 32 MB வரை மட்டுமே இருக்க வேண்டும் (32MBக்கு மேல் இருக்கக்கூடாது). PPC PReP முதன்மை பகிர்வாகவும் செயலில் உள்ளது என குறிப்பிடப்பட்டும் இருக்க வேண்டும்.marked active.
iSeries பயன்படுத்தாதவர்கள்: A /boot/ பகிர்வு (100 MB) (/boot/ iSeries கணினிகளுக்கு தேவையில்லை) — /boot/ இயங்குதளத்திற்கான கர்னல் உள்ள பகிர்வுகள் ( Red Hat Enterprise Linux கணினியில் துவக்க உதவும்)பூட்ஸ்ராப் செயலுடன் இருக்கும், . உங்கள் PCயின் வரம்புகளுக்கு ஏற்ப firmware , சிறிய பகிர்வுகளை உருவாக்கி இந்த கருத்தை செயல்படுத்தவும். பொதுவாக 100 MB துவக்க பகிர்வு போதுமானதாக இருக்கும்.
![]() | எச்சரிக்கை |
|---|---|
உங்களிடம் RAID அட்டை உள்ளது, சில நிலைபொருள் RAID அட்டையிலிருந்து துவங்குவதற்கான ஆதரவை தராது . இது போன்ற சூழ்நிலையில் /boot/ பகிர்வு RAID அரேவுக்கு வெளியே உருவாக்கப்படவேண்டும்,தனி வன்தகட்டில் . இதுவே PReP iSeries கணினியில் செயல்படும் விதமாகும். |
root பகிர்வு (500 MB - 5.0 GB) — இங்கே "/" (மூல அடைவு)இருக்கும்.இந்த, நிறுவல் நிரலில் அமைப்பு கோப்புகள்(/boot இல் சேமிக்கப்பட்டவை தவிர) முதன்மை பகிர்வில் இருக்கும்.
500 MB பகிர்வு குறைந்த பட்ச நிறுவலை தொடர உதவும்.முழு நிறுவலை தொடரவும் எல்லா கட்டுகளை நிறுவவும் 5.0 GB முதன்மை பகிர்வு தேவை.
புதிய பகிர்வை சேர்க்க புதிய பட்டனை தேர்வு செய்யவும். A உரையாடல் பெட்டி தோன்றும் (படம் 2-14 பார்க்கவும்).
![]() | குறிப்பு |
|---|---|
இரண்டு பகிர்வுகள் நிறுவலுக்கு ஒரே ஒரு பகிர்வையாவது குறிப்பிடவேண்டும் அதிக தகவலுக்கு இணைப்பு C.பாக்கவும் |
ஏற்ற புள்ளி: ஏற்றப்புள்ளியை உள்ளிடவும். உதாரணம் இது root பகிர்வாக இருந்தால், /; /boot துவக்க பகிர்வுக்கு /boot எனவும் உள்ளிட வேண்டும். தோன்றும் சாளரத்தை பயன்படுத்தியும் ஏற்றப்புள்ளியை தேர்வு செய்யலாம்.
கோப்பு அமைப்பு வகை: தோன்றும் சாளரத்தை பயன்படுத்தி சரியான கோப்பு வகையை தேர்வு செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு பகுதி 2.14.5.1 ஐ பார்க்கவும்.
அனுமதிக்கப்பட்ட இயக்கிகள்: இந்த பட்டியலில் உங்கள் கணினியில் உள்ள வட்டுகளின் பட்டியல் தெரியும். உங்கள் வன்தகடு தனிப்படுத்தப்பட்டிருந்தால் தேவையான பகிர்வுகளை அதில் உருவாக்கலாம். வன்தகடு தனிப்படுத்திகாட்டவில்லை எனில், பகிர்வை எப்போதும் உருவாக்க முடியாது. வேறு சோதனை பெட்டிகளை பயன்படுத்தி, வட்டு ரூயிட் பகிர்வுகளை அமைக்கலாம் அல்லது வட்டு ரூயிட் தானாகவே பகிர்வை முடிவு செய்ய விட்டுவிடலாம்.
அளவு (MB): பகிர்வின் அளவை (மெகா பைட்டில்) உள்ளிடவும். குறிப்பு, இந்த புலம் 100 MB; இல் துவங்கும். மாற்றம் எதுவும் செய்யவில்லை எனில்100 MB பகிர்வு உருவாக்கப்படும்.
கூடுதல் அளவு தேர்வு: பகிர்வுகள் நிலையான அளவில் இருக்க வேண்டுமா, அல்லது நேரத்திற்கு ஏற்ப "வளர" வேண்டுமா என்பதை தேர்வு செய்யவும் (வன் தகடு இடத்தில் குறிப்பிடவும்).
(MB) வரை நிரப்பவும் என்பதை தேர்வு செய்தால், தேர்வின் வலது பக்கத்தில் அளவு நடைமுறையை குறிப்பிடவேண்டும். இதன் மூலம் உங்கள் வன்தகட்டில் வருங்கால பயன்பாட்டிற்காக சிறிது காலி இடங்களை ஒதுக்க முடியும்.
முதன்மை பகிர்வை வலியுறுத்து: நீங்கள் உருவாக்கிய பகிர்வு முறை வன்தகட்டின் முதல் நான்கு பகிர்வுமுறையா என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்யவில்லை எனில் பகிர்வு முறையை லாஜிகல் என எடுத்துக்கொள்ளும். விவரங்களுக்கு பகுதி C.1.3, பார்க்கவும்.
சரி:உங்கள் அமைப்பின் உங்களுக்கு திருப்தி இருந்தால் சரி என்பதை அழுத்தவும்.
ரத்துசெய்: பகிர்வை உருவாக்க விருப்பமில்லையெனில்.ரத்துசெய் என்பதை க்ளிக் செய்யவும்
Red Hat Enterprise Linux கோப்பு அமைப்பை பொருத்து பகிர்வை உருவாக்க அனுமதிக்கும் மென்பொருள். பலவகையான கோப்பு அமைப்புகளையும் அவைகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் கீழே காணலாம்.
ext2 — ext2 கோப்பு அமைப்பு நிலையான யூனிக்ஸ் கோப்பு ஆதரவு கொண்டது (கோப்புகள், அடைவுகள், இணைப்புகள், இன்னபிற). இது நீளமான 255 எழுத்துவரையுள்ள கோப்பு பெயர்களை அனுமதிக்கும்,
ext3 — ext3 கோப்பு அமைப்பு ext2 வை அடிப்படையாக கொண்டது ஆனால் இதில் ஆவணமாக்கல் வசதி உள்ளது — இந்த வசதியை பயன்படுத்தி நொறுங்கிய கோப்புகளையும் fsck[1]. ext3 ஐ தேர்வு செய்யும் படி பரிந்துரைக்கப்படுகிறது
பிசிக்கல் வால்யூம்(LVM)— ஒன்றுக்கும் பிசிக்கல் வால்யூம் (LVM) பகிர்வுகள் LVM லாஜிக்கல் வால்யூம்களை உருவாக்க பயன்படும். LVM உங்கள் வட்டில் செயல்திறனை அதிகரிக்கும் LVM, பற்றிய கூடுதல் தகவலுக்கு Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு ஐ பார்க்கவும்.
மென்பொருள் RAID — இரண்டுக்கும் மேற்பட்ட RAID பகிர்வுகளை உருவாக்குவதால் RAID சாதனத்தை உருவாக்க முடியும். RAID பற்றிய கூடுதல் தகவலுக்கு, Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு உள்ள RAID (Redundant Array of Independent Disks) ஐ பார்க்கவும்.
ஸ்வாப் — ஸ்வாப் பகிர்வுகள் மெய்நிகர் நினைவக ஆதரவிற்கு பயன்படுகின்றன.RAM செயல்பாட்டில் இருப்கும் போது போதிய வேலைகளை செய்ய இடமில்லாத போது தகவல்கள் ஸ்வாப் பகிர்வில் எழுதப்படும். கூடுதல் தகவலுக்கு Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு ஐ பார்க்கவும்
vfat — VFAT மைக்ரோசாப்ஃட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இரண்டிற்கும் பொதுவான கோப்பு அமைப்பு முறை.
PPC PReP Boot — PPC PReP துவக்க பகிர்வில் இயங்குதளத்தின் கர்னல் *NWSSTG IPL லிருந்து துவக்க iSeries) அல்லது YABOOT துவக்க இயக்கி இருக்கும் (இது உங்கள் pSeries கணினிகளை Red Hat Enterprise Linux துவக்கும்).
| [1] | The fsck பயன்பாட்டை கொண்டு கோப்புகளை பழுதுபார்த்து அவைகளின் மெட்டாதகவல்களை சரி செய்து கோப்புகளை திரும்ப பெற முடியும். |