பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது

இந்த பாடம் CD-ROM மிலிருந்து வரைகலை இடை முகம் வழியாக, சுட்டியை பயன்படுத்தி ,Red Hat Enterprise Linux ஐ நிறுவது பற்றி விளக்கும்.

2.1. வரைகலை நிறுவல் இடைமுகம்

வரைகலை பயனர் இடைமுகத்தை (GUI) பயன்படுத்துவது பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தால்; உங்கள் சுட்டியை பயன்படுத்தி அடுத்த திரைக்கு செல்லவும், அல்லது உரை புலத்திற்கு செல்லவும்.

விசைப்பலகையை பயன்படுத்தியும் உங்கள் நிறுவலை தொடர முடியும். [Tab] விசை திரைக்குள் நகர உதவும். மேல் மற்றும் கீழ் அம்புக்குறி விசைகள் பட்டியலுக்குள் நகர உதவும் [+] மற்றும் [-] விசைகள் பட்டியலை சேர்க்க விரிக்க உதவும் [Space] மற்றும் [Enter] விசைகள் தேர்வு செய்யவும் தேர்வை நீக்கவும் உதவும். [Alt]-[X] ஐ ஒரு சேர அழுத்தி பட்டனை அல்லது திரையை தேர்வு செய்யலாம். [X] விசையை திரையில் தோன்றும் அடிக்கோடிட்ட உரையாடலால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

வசதி இல்லாத கணினியில் வரைகலை இடைமுகத்தை பயன்படுத்த விரும்பினால் அதாவது பகிரப்பட்ட கணினியில் VNC அல்லது காட்சி முன்னனுப்பலை பயன்படுத்தலாம். VNC மற்றும் காட்சி முன்னனுப்பல் நிறுவலுக்கும் நிறுவலின் போதும் துவக்க அளவுருக்களை பயன்படுத்தும் போதும் வலைப்பின்னல் செயலில் இருக்க வேண்டும்.. துவக்க தேர்வுகள் பற்றிய தகவலுக்கு: இணைப்பு E.

குறிப்புகுறிப்பு
 

GUI முறை நிறுவலை தொடர விருப்பமில்லையெனில் உரை முறை நிறுவலை பயன்படுத்தலாம். உரை முறை நிறுவலை துவக்க கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்.

linux text

உரை முறை நிறுவல் பற்றிய முழு தகவலுக்கு பகுதி 2.2 ஐ பார்க்கவும்

GUI முறை நிறுவலை பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது. GUI நிரலில் Red Hat Enterprise Linux இன் முழு செயலாக்கத்தையும் முழுமையாக பயன்படுத்த முடியும். உதாரணமாக LVM அமைப்பு வசதி உரை முறை நிறுவலில் இல்லை

உரைமுறை நிறுவலை பின்பற்றுபவர்கள் GUI நிறுவல் விளக்கங்களை பயன்படுத்தி தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

iSeries கணினி பயனீட்டாளர்கள் கையேட்டில் குறிப்பிட்டது போல் துவக்க தேர்வை சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (இணைப்பு E) மற்ற இயங்கு தளங்களளுக்கு முதலில் iSeries பயனராக OS/400 கணினியில் நுழைந்து OS/400 இன் அமர்வுக்குள் IPL அளவுருக்களை அமைக்க வேண்டும்.

2.1.1. ஓப்பன் பவர் p5, i5, மற்றும் pSeries நிறுவல் நிரல் துவங்குகிறது

ஓப்பன் பவர், p5, i5, அல்லது pSeries கணினிகளை CD-ROM மூலம் துவக்க துவக்க சாதனத்தை கணினி மேலாண்மை சேவையை (SMS) மெனுவில் குறிப்பிட வேண்டும்.

கணினி மேலாண்மை சேவைக்கான GUI சேவைக்கு செல்ல, [1] ஐ அழுத்தவும். துவக்கத்தின் போது மணியோசை கேட்கும் . இது மேலே குறிப்பிட்டது போல வரைகலை இடைமுகத்தை காட்டும்.

உரை கன்சோலில் [1] ஐ அழுத்தினால் தானாக சோதிக்கும் வசதி சோதித்த பாகங்களோடு தெரியும்.

படம் 2-1. SMS கன்சோல்

SMS மெனு, துவக்க தேர்வை தேர்வு செய் என்பதை தேர்வு செய்யவும். இந்த மெனுவில் நிறுவு அல்லது துவக்க சாதனத்தை தேர்வு செய் என்பதை குறிப்பிடவும். CD/DVD தேர்வு செய்து பஸ்வைகையை தேர்வு (SCSI சாதனத்தில்) செய்யவும். நிச்சயமாக தெரியவில்லையெனில்.எல்லாசாதனங்களையும் பார் என்பதை தேர்வுசெய்யவும். இது எல்லா பஸ், துவக்க சாதனம் , வலைப்பின்னல் ஏற்பி மற்றும் வன்தகடு ஆகியவைகளை தேடும்.

இறுதியாக, நிறுவல் CD உள்ள சாதனத்தை தேர்வு செய்யவும். YABOOT சாதனத்திலிருந்து ஏற்றப்பட்டதும் boot: ப்ராம்ட் காட்டப்படும். பிறகு [என்டர்] விசையை அழுத்தவும் அல்லது நிறுவல் துவக்க காலம் கடக்கும் வரை காத்திருக்கவும்.

iSeries அல்லாத கணினிகளிலிருந்து வலைப்பின்னல் வழியாக துவங்கும் போது ( i5 இல்*STMF துவங்கும் போது )CD #1 இல் உள்ள images/netboot.img ஐ பயன்படுத்தவும்.

2.1.2. iSeries நிறுவல் நிரலை துவக்குகிறது

நிறுவல் CD ஐ CD-ROM இயக்கியில் சொருகவும். CD குறிப்பிடும் OS/400 தொகுதியின் பெயரை கண்டறியவும். wrklnk '/qopt/*' கட்டளையை OS/400 கட்டளை வரியில் இயக்குவதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். WRKOPTVOL ஒலி ஊடு தகவவல் பற்றிய கூடுதல் தகவல்களை தரும். இதே அடையாளத்தில் வேறு CD இல்லாதவரை தொகுப்பின் பெயர் Red_Hat ஆக இருக்கும். குறிப்பு, தொகுப்பின் பெயரில் நேரமண்டல தகவல் இருந்தால் (பெயர் சிக்கல் வரும் போது) CD ஐ வெளியேற்றி மீண்டும் சொருகி முயலவும்.

உங்கள் வலைப்பின்னல் சேவகன் (NWS) OS/400 பயன்படுத்தி மாறுபடுத்தப்பட்டதாWRKCFGSTS (*nws) கட்டளை.

வலைப்பின்னல் சேவகன் விளக்கத்தை திருத்தவும் (NWSD). IPL மூல புலத்தை*STMF அமைக்கவும்.

IPL ஸ்டீம் கோப்பு புலத்தை /QOPT/RED_HAT/PPC/ISERIES/BOOT.IMG என அமைக்கவும்(சரியில்லை எனில்), இங்கே /QOPTகீழ் தெரியும் Red_Hat CD யின் பெயராகும்.

நீங்கள் இயக்கியை பயன்படுத்தினால் IPL அளவுருவை 'dd' என அமைக்கவும் (மேற்கோள் குறியும் சேர்த்து).இல்லையெனில் *NONE என அமைக்கவும்

குறிப்புகுறிப்பு
 

Red Hat vnc அல்லது display=<workstation> துவக்க கட்டளையை வரைகலை நிறுவலில் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. இல்லையெனில், புலத்தை *NONE என அமைத்து உரை முறை நிறுவலை பயன்படுத்தவும். உங்கள் கணினியில் ,xhost+ கணினியில் புரவனுக்கான கட்டளையை நிறுவத்துவங்கும் முன் அமைக்க மறக்காதீர். துவக்க கட்டளை பற்றிய கூடுதல் தகவலுக்கு இணைப்பு E ஐ பார்க்கவும்.

உங்கள் லினக்ஸ் பகிர்வில் உள்ள OS/400 இன் மெய்நிகர் கன்சோலிலை டெல்நெட் பயன்படுத்தி இணைக்கவும். இதற்கு telnet <hosting partition> 2301 கட்டளையை பயன்படுத்தவும். பகுதி 2.1.5 ஐ பார்த்து கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளவும்

NWS இல் மாறுபடும். மெய்நிகர் கன்சோலில் துவக்க வரிசை இன்னும் சில வினாடிகளுக்குள் துவங்கும். நிறுவல் நிரல் தானாக துவங்கும். VNC அல்லது X-Host அடிப்படையிலான நிறுவலை தொடர விரும்பினால் , மெய்நிகர் கன்சோலில் வலைப்பின்னல் தகவல்களை அமைக்கலாம்.

2.1.3. மெய்நிகர் கன்சோல் குறிப்பு ஓப்பன் பவர், p5, மற்றும் pSeries

இந்த தகவல் பகிர்க்கப்படாத வீடியோ அட்டையை கன்சோலில் பயன்படுத்தும் ஓப்பன் பவர், p5, மற்றும் pSeries கணினிகளுக்கு பொருந்தும். பகிர்க்கப்பட்ட ஓப்பன் பவர், p5, மற்றும் pSeries கணினியை பயன்படுத்துபவர்கள் இந்த பகுதியை தவிர்க்கவும் பகுதி 2.1.4, iSeries பயனர்கள் பகுதி 2.1.5 ஐ தவிர்க்க வேண்டும்.

Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் உரையாடல் பெட்டியுடன் கூடிய நிறுவல் நிரலை காட்டும். சிக்கலை கண்டுபிடிக்கவும் ஷெல் ப்ராம்டில் கட்டளையை உள்ளிடவும் பல வழிகள் உள்ளன, நிறுவல் நிரல் செய்திகளை ஐந்து மெய்நிகர் கன்சோலில், காட்டும் அவைகளில் தேவையானவைகளை தேர்வு செய்துகொள்ள முடியும்.

மெய்நிகர் கன்சோல் என்பது வரைகலை காட்சியற்ற , தொலை கணினியால் பயன்படுத்தமுடியாத திரை. ஒரே சமயத்தில் பல மெய்நிகர் கன்சோல்களை பயன்படுத்த முடியும்.

Red Hat Enterprise Linux ஐ நிறுவும் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க மெய்நிகர் கன்சோல்கள் பயன்படுகின்றன. இந்த கன்சோலில் நிறுவலின்போது ஏற்பட்ட பிழைகள் காட்டப்படும். அட்டவணை 2-1 இல் மெய்நிகர் கன்சோல் பற்றியும் அவைகளுக்குள் நகர்வது பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக, இயல்பான கன்சோலை விடுவதற்கு காரணம் எதுவுமில்லை(மெய்நிகர் கன்சோல் #7 வரைகலை நிறுவலுக்கு பயன்படும் அல்லது மெய்நிகர் கன்சோல்#1 உரை-முறை நிறுவலுக்கு ). நிறுவல் சிக்கலை தெரிந்துகொள்ள வேறு கன்சோல் திரை தேவைப்படலாம்.

கன்சோல் விசைகள் உள்ளடக்கங்கள்
1 [Ctrl]-[Alt]-[F1] நிறுவல் உரையாடல்
2 [Ctrl]-[Alt]-[F2] ஷெல் ப்ராம்ட்
3 [Ctrl]-[Alt]-[F3] நிறுவல் பதிவேடு(நிறுவல் நிரல் செய்திகள்)
4 [Ctrl]-[Alt]-[F4] கணினி-தொடர்பான செய்திகள்
5 [Ctrl]-[Alt]-[F5] மற்ற செய்திகள்
7 [Ctrl]-[Alt]-[F7] X வரைகலை காட்சி

அட்டவணை 2-1. கன்சோல், விசைகள் மற்றும் உள்ளடக்கங்கள்

2.1.4. HMC vterm ஐ பயன்படுத்துகிறது

HMC vterm பகிர்க்கப்பட்ட ஓப்பன் பவர் 5, i5, அல்லது pSeries கணினிகளுக்கான கன்சோல். இதை HMC, உள்ள பகிர்வின் மேல் வலது க்ளிக் செய்து முனையசாளரத்தில் திற என்பதை தேர்வு செய்து திறக்கலாம். ஒரே சமயத்தில் ஒரு மெய்நிகர் கன்சோலில் ஒரு vterm மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். பகிர்க்கபட்ட கணினிகளில் vterm தவிர வேறு விதத்தில் கன்சோலை அணுக முடியாது. இதை 'மெய்நிகர் கன்சோல்', என்பர். இது பகுதி 2.1.3 உள்ள ற கன்சோலிலிருந்தஅல்லது iSeries பகுதி 2.1.5 மெய்நிகர் கன்சோலிலிருந்து மாறுபட்டது.,

2.1.5. iSeries மெய்நிகர் கன்சோலை பயன்படுத்துதல்

iSeries மெய்நிகர் கன்சோலை நிறுவலுக்கு பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் DST பயனர்id ஐ உருவாக்கி அதற்கு மெய்நிகர் கன்சோலை பயன்படுத்துவதற்கான அனுமதியை தரவேண்டும். V5R2 வில் SST ஐ துவக்கவும்(STRSST OS/400 பகிர்விலிருந்து பயன்படுத்தவும்) மேலும் 8, சேவைகருவி பயனர் IDக்களை பயன்படுத்தல் என்பதை தேர்வு செய்யவும்.மெய்நிகர் கன்சோலை அனுக QSECOFR பயனர் அடையாளத்தை உங்களால் பயன்படுத்த முடியாது. புதிய பயனர் ID ஐ உருவாக்கி அதை தொலை பலக விசை பகிர்வு அனுப்பி லினக்ஸ் பகிர்வுகளை அனுகலாம்.

மெய்நிகர் கன்சோலை பயன்படுத்த telnet <systemname> 2301 கட்டளையை பயன்படுத்தவும். இங்கே <systemname> OS/400 பகிர்வின் புரவலன் பெயராகும். ு இணைக்கப்பட்டதும்,மெய்நிகர் கன்சோல் OS/400வில் உள்ள லினக்ஸ் பகிர்வுகளை பட்டியலிடும். பகிர்வு எண்ணை தேர்வு செய்து DST பயனர்id மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

மெய்நிகர் கன்சோல் டெல்நெட் கிளையன் கணினிகளில் பயன்படுகிறது, ஆனால் லினக்ஸ் சார்ந்த X முனையத்தில் telnet கட்டளையை போதோ (க்னோம் முனையத்தில்) அல்லது எம் எஸ் விண்டோஸில் PuTTY ஐ பயன்படுத்தும்போதோ சிறப்பாக வேலை செய்யும். விண்டோஸ் மெய்நிகர் கன்சோலில் உரை சார்ந்த நிறுவல் முறையை பயன்படுத்தும் போது எழுத்துரு சரியாக வேலை செய்யாது. அதே சமயம் vi எடிட்டரின் கட்டளை வரி முறையை பின்பற்றுவதும் தவறு.