இணைப்பு E. கூடுதல் துவக்க தேர்வுகள்

இந்த இணைப்பு Red Hat Enterprise Linux நிறுவல் நிரலில் உள்ள துவக்க மற்றும் கர்னல் துவக்க தேர்வுகள் பற்றிய கூடுதல் தகவல்களை கொண்டது

இதில் கொடுக்கப்பட்ட துவக்க தேர்வுகளில் ஒன்றை பயன்படுத்த, நீங்கள் செயலாக்க விரும்புக் கட்டளையை பூட் ப்ரம்டில் boot: நிறுவலின் போது உள்ளிடவும்.

இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள மற்ற இயங்குதளங்களுக்கான நிறுவல் முறையில் குறிப்பிட்டுள்ளது போல் iSeries கணினி பயனீட்டாளர்கள் துவக்க தேர்வுகளை சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் iSeries பயனராக OS/400 பகிர்வில் நுழைந்து IPL அளவுருக்களை NWSD பகிர்வுக்குள் அமைக்க வேண்டும்.

துவக்க நேர கட்டளை அளவுரு

askmethod

Red Hat Enterprise Linux CD-ROM லிருந்து துவங்கும் போது இந்த கட்டளை நீங்கள் விரும்பும் நிறுவல் முறையை தேர்வு செய்ய சொல்லும்.

dd

இந்த நிரல் நிறுவல் நிரல் இயக்கிவட்டை பயன்படுத்த வலியுறுத்தும்

dd=url

HTTP, FTP, அல்லது NFS வலைப்பின்னல் முகவரியிலிருந்து குறிப்பிட்ட இயக்க கோப்பை நிறுவல் நிரல் பயன்படுத்த இந்த அளவுரு நினைவு படுத்தும்

display=IP:0

இந்த கட்டளை தொலை காட்சி முன்னனுப்பலை அனுமதிக்கும். இந்த கட்டளையில் IP ஐ காட்சி தெரிய வேண்டிய கணினியின் IP முகவரியால் மாற்ற வேண்டும்

காட்சி தெரிய வேண்டிய கணினியில் கீழ்கண்ட கட்டளையை உள்ளிட வேண்டும். xhost +remotehostname, இதில் remotehostname ஐ நீங்கள் காட்சியை இயக்கும் புரவலன் பெயரால் மாற்ற வேண்டும். xhost +remotehostname கட்டளையை பயன்படுத்துவதன் மூலம் அனுமதி பெறாத தொலை கணினிகள் உங்கள் கணினியை அனுக அனுமதிக்காது.

driverdisk

இந்த கட்டளை dd கட்டளையை போலவே வேலை செய்யும். மேலும் Red Hat Enterprise Linux.நிறுவலின் போது இயக்கி வட்டை பயன்படுத்த நினைவூட்டும்.

ide=nodma

இந்த கட்டளை DMA வில் உள்ள IDE சாதனங்களை செயல்நீக்கி IDE-தொடர்புடைய சிக்கல்களை தீர்க்க உதவும்.

mediacheck

நிறுவப்பட்ட மூலங்களின் நம்பத்தன்மையை பரிசோதிக்க இந்த கட்டளை பயனபடும். (ISO-அடிப்படையிலான முறை). இந்த கட்டளை CD, DVD,ISO வன்தகடு மற்றும் NFS ISO நிறுவல் முறைகளில் வேலை செய்யும். ISO கோப்புகள் பழுதடைந்துள்ளதா என்பதை சோதித்தபின் நிறுவுவது நிறுவலின் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க உதவும்.

mem=xxxM

இந்த கட்டளை உங்கள் கர்னல் கண்டறிந்த நினைவகத்தின் அளவை புறக்கணிக்க அனுமதிக்கும். இது பழைய 16 எம்பி கணினிகளிலும் ,புதிய வீடியோ அட்டை வீடியோ நினைவகங்களை முதன்மை நினைவகத்துடன் பகிர்ந்துகொள்ளும் கணினிகளில் பயன்படும். இந்த கட்டளையை இயக்கும் போது xxx நினைவகத்தின் அளவு மெகாபைட்டில் மாற்ற வேண்டும்

nopass

இந்த கட்டளை விசைப்பலகை மற்றும் சுட்டி பற்றிய தகவல்களை அடுத்த திரைக்கு கொண்டு செல்வதை செயல்நீக்கும். இது நிலை 2 இல் வலைப்பின்னல் நிறுவலின் போது விசைப்பலகை மற்றும் சுட்டி அமைப்பை சோதிக்க பயன்படும்.

nopcmcia

கணினியில் உள்ள PCMCIA கட்டுப்படுத்தியை தவிர்க பயன்படும்.

noprobe

இந்த கட்டளை வன்பொருள் கண்டறிவதை தடுப்பதோடு பயனர்களுக்கு வன்பொருள் பற்றிய தகவலை நினைவூட்ட பயன்படும்

noshell

இந்த கட்டளை மெய்நிகர் கன்சோல் 2 இல் நிறுவலின் போது ஷெல்லை உபயோகிப்பதை தடுக்கும்

nousb

இந்த கட்டளை நிறுவலின் போது USB ஐ ஏற்றுவதற்கான ஆதரவை தடை செய்யும். நிறுவல் நிரல் செயல்பாட்டில் துவக்கதிலேயே தடை ஏற்படும் போது இந்த கட்டளை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

nousbstorage

இந்த கட்டளை நிறுவல் நிரம் usbநினைவக பகுதி ஏற்றப்படுவதை தடை செய்யும். இது SCSI கணினியில் சாதனங்கள் வரிசைப்படுத்தலுக்கு உதவும்.

rescue

இந்த கட்டளை இக்கட்டன முறைமையை செயல்படுத்த உதவும் Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு ஐ பார்த்து மேலும் தகவல்களை தெரிந்துகொள்ளவும்.

resolution=

இது நிறுவல் நிரல் எந்த வீடியோ முறைமையை பயன்படுத்த வேண்டும்.இது நிலையான தெளிவுத்திறன்களான 640x480, 800x600, 1024x768களில் பயன்படும்

serial

இந்த கட்டளை சீரியல் கன்சோல்களை செயல்படுத்தும்

text

இந்த கட்டளை வரைகலை நிறுவலை தவிர்த்து நிறுவல் உரைப்பாங்கில் நிகழச்செய்யும்

updates

இந்த கட்டளை உங்களை நெகிழ்வட்டை சொருகச் கேட்கும். (பிழை திருத்த). வலைப்பின்னல் நிறுவலுக்கு இது அவசியம் இல்லை காரணம் மேம்படுத்தபப்பட்ட கோப்புகள் RHupdates/ இல் சேவகனில் ஏற்கெனவே இருக்கும்

vnc

VNC சேவகனை நிறுவ இந்த கட்டளை பயன்படும்

vncpassword=

VNC சேவகனுக்கு தேவையான கடவுச்சொல்லை அமைக்க இந்த கட்டளை உதவும்.